டி.ராஜேந்தரின் உடல்நலனை விசாரித்த முதல்வர் ஸ்டாலின் | ரஜினியை சந்தித்த கமல், லோகேஷ் | பிபியை எகிறச் செய்யும் சிவானியின் பேரழகு | குமரிப்பெண், முதல் நீ முடிவும் நீ, காஞ்சனா 2 - ஞாயிறு திரைப்படங்கள் | சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சாக்ஷி அகர்வால் | ஸ்ருதி சண்முகப்ரியாவின் பேச்சுலர் பார்ட்டி புகைப்படங்கள் வைரல் | சித்ரா மாதிரி ஆகிடுமோனு பயமா இருக்கு : நக்ஷத்திரா பற்றி பகீர் கிளப்பும் ஸ்ரீநிதி விஜய் | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஷங்கர் பட நாயகி | மன்சூரலிகானிடம் ரூ. 50 லட்சம் மோசடி | சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் - அக்சய்குமார் லுக் வெளியானது |
நம் மனதுக்குப் பிடித்தவர்களுக்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்வோம். அது மனிதர்களாக இருந்தாலும் சரி, பிராணிகளாக இருந்தாலும் சரி. மாடு, நாய், ஆடு, கோழி என வீட்டில் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளை நம்மைப் போல் பாசமாகப் பார்த்துக் கொள்பவர்களை மிஞ்ச யாருமே இருக்க மாட்டார்கள்.
நடிகை கீர்த்தி சுரேஷ் அவருடைய வீட்டில் இரண்டு செல்ல நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். நேற்று கேரளாவில் குடும்பத்தாருடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய கீர்த்தி அந்தக் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
குடும்பத்தினர் அனைவரும் புத்தாடை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தாலும், கீர்த்தி தன் செல்ல நாய்களுக்கு புது வேட்டி, சட்டை அணிவித்து அவற்றுடன் போஸ் கொடுத்த புகைப்படம் நம்மை அதிகம் கவர்ந்தது. அதைவிட மற்றொரு புகைப்படத்தில் இரண்டுமே தலையை சாய்த்து எதையோ கவனமாகக் கேட்கும் புகைப்படம் மிக அழகு.