25 வருடங்களை நிறைவு செய்த 'சூர்ய வம்சம்' | 30 வருடங்களை நிறைவு செய்த 'அண்ணாமலை' | மதுரையில் களைகட்டியது இளையராஜா இசை நிகழ்ச்சி | இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன் | விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கிரித்தி ஷெட்டி | ரசிகர்களை அதிரவிட்ட ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள் | கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் ஜப்பான்? | துல்கர் சல்மானின் சீதாராமம் படத்தின் டீசர் வெளியானது | 32 ஆண்டுகள் கழித்து முதல் ஹீரோவுடன் மீண்டும் இணையும் மீனா | கிரிக்கெட் வீரராக அறிமுகமான கவுதம் மேனன் மகன் |
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக பல சினிமா பிரபலங்கள் அவர்களது வீட்டைவிட்டு வெளியில் வேறெங்கும் போகவில்லை. பலரும் அவரவர் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர்.
நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள அவருடைய அபார்ட்டிமென்ட்டிலேயே இருந்தார். இடையில் அவருக்குக் கொரோனா என்றெல்லாம் வேறு வதந்தி பரவியது.
இந்நிலையில் நயன்தாராவும், அவரது காதலர் (இன்னும் காதலர்தானா?) இயக்குனர் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்னையிலிருந்து கொச்சி சென்றனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கே பலவிதமான கமெண்ட்டுகள் வந்தன.
நேற்று கொச்சியில் நயன்தாரா வீட்டில் இந்த காதல் ஜோடி ஓணம் கொண்டாடிய பின் பல புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல் விக்னேஷ் சிவன் வெளியிட்டார். அவற்றில் நயன்தாராவின் அம்மாவும் இடம் பெற்றிருந்தார். மேலும், நயனும், விக்கியும் நெருக்கமாக அமர்ந்திருந்த புகைப்படங்களும் இருந்தன.
மற்றவர்கள் பொறாமைப்பட வேண்டும் என்பதற்காகவே விக்னேஷ் சிவன் இப்படியெல்லாம் புகைப்படங்களைப் பதிவிடுகிறார் என்பது தான் பலரது கருத்தாக உள்ளது.
நயன்தாராவின் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார் விக்னேஷ் சிவன். நேற்று நயன்தாராவின் அம்மாவுடன் இந்த ஜோடி போட்டோ எடுத்ததை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
ஜோடியாக சேர்ந்து ஓணம் கொண்டாடுவது வரை வந்துவிட்டார்கள். ஒன்றாக வேறு வசிக்கிறார்கள். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லையா, அல்லது நயன்தாராவின் மார்க்கெட் போய்விடும் என்பதற்காக திருமணத்தை மறைக்கிறார்களா என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.