அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
சென்னை : எஸ்.பி.பி., உடல்நிலை சீராக உள்ளது. சுயநினைவுடன் இருக்கும் அவர், பிசியோதெரபிக்கு ஒத்துழைப்பு தருகிறார் என, எம்.ஜி.எம்., மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புக்குள்ளான பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்(75), சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரது உடல் உறுப்புகள், சீராக இயங்கி வருகின்றன. நுரையீரல் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எம்.ஜி.எம்., மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பி., உடல்நிலை சீராக உள்ளது. சுயநினைவுடன் இருக்கும் அவர், பிசியோதெரபிக்கு ஒத்துழைப்பு தருகிறார் என, கூறப்பட்டுள்ளது.
எஸ்.பி.பி., மகன் சரண், நேற்று வெளியிட்ட வீடியோ பதிவு:மருத்துவமனைக்கு சென்று, அப்பாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். நுரையீரல் எக்ஸ்ரேவை மருத்துவர்கள் காண்பித்தனர்; நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக படுக்கையில் இருப்பதால், தசை வலிமை பெற, உடற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அப்பா நன்றாக சுவாசிக்கிறார். அனைவரின் பிரார்த்தனைக்கும் விரைவில் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.