Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படப்பிடிப்புக்கு 100 பேரை அனுமதிங்க : பெப்சி கோரிக்கை

01 செப், 2020 - 09:38 IST
எழுத்தின் அளவு:
FEFSI-demands-to-allow-100-people-in-shooting

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று(செப்.,1) முதல் சினிமா படப்பிடிப்புகள் நடத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அதிகபட்சம் 75பேர் வரை படப்பிடிப்பில் பணியாற்றலாம் என்று அறிவித்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் 75 நபர்களை கொண்டு சிறு பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பை மட்டுமே நடத்த முடியும் என்று தயாரிப்பாளர்கள் கருதுகிறார்கள். இதனால் இன்று பெரிய படங்களின் படப்பிடிப்பு எதுவும் தொடங்கப்படவில்லை. பெரிய பட்ஜெட் படங்களில் குறைந்தபட்சம் 200 பேர் பணியாற்ற வேண்டியது இருக்கும். அதனால் அதற்கான அனுமதி கிடைத்த பிறகே படப்பிடிப்பை தொடர பெரிய பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

சுமார் 20 பெரிய படங்கள் படப்பிடிப்புக்கு தயாராக இருக்கிறது. ஆனால் 75 பேரை கொண்டு படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலையில் அவைகள் தயக்கம் காட்டி வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்புக்கு 100 பேரையாவது அனுமதிக்க வேண்டும் என்று பெப்சி தமிழக அரசுக்கு நேற்று கடிதம் அனுப்பியது. படப்பிடிப்புக்கு 100 பேரை அனுமதிக்கும் உத்தரவு ஓரிரு நாளில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'சூரரைப்போற்று' வியாபாத்தில் ரூ.3.5 கோடியை கல்விக்கு ஒதுக்கிய சூர்யா'சூரரைப்போற்று' வியாபாத்தில் ரூ.3.5 ... தமிழில் ரீமேக்காகும் டாப்சியின் 'ராஷ்மி ராக்கெட்' தமிழில் ரீமேக்காகும் டாப்சியின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sridhar - Chennai,இந்தியா
01 செப், 2020 - 13:01 Report Abuse
sridhar அனுமதிக்கலாம் , ஆனால் காமெராமேன் இருக்கக்கூடாது , சம்மதமா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in