மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டதால் நாட்டில் மார்ச் மாதம் தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டது. கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடுப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களில் பல்வேறு தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. ஆனால், செப்டம்பர் மாதத்திற்கான ஊரடங்கு தளர்விலும் தியேட்டர்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.
அது, தியேட்டர்காரர்களையும், திரையுலகத்தினரையும் கவலை கொள்ள வைத்துள்ளது. அதனால், அவர்கள் “#SupportMovieTheatres' என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி டுவிட்டரில் அதை டிரென்டிங்கில் வரவைத்தனர்.
தியேட்டர்களைத் திறக்க திரையுலகத்தினர் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று பல சினிமா பிரபலங்கள் அந்த ஹேஷ்டேக்கில் தியேட்டர்களைத் திறக்க தங்களது கருத்துக்களைத் தெரிவித்தபடி இருக்கின்றனர்.
இதனிடையே, மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கம், இந்தியப் பிரதமர் மோடிக்கு தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
அக்டோபர் மாதத்திலாவது தியேட்டர்களைத் திறக்க அனுமதி கிடைக்குமா அல்லது இன்னும் தள்ளிப் போகுமா என்பது அரசு கையில்தான் உள்ளது.