துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருகிறார். தமிழில் அவருக்கு ஏகப்பட்ட படங்கள் வரிசைக்கட்டி இருக்கின்றன.
இந்நிலையில் தெலுங்கிலும் பிரியாவுக்கு வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளன. தற்போது அவர் சமந்தாவின் கணவரும், நாகார்ஜுனாவின் மகனுமான நடிகர் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக போவதாக கூறப்படுகிறது.
நாகசைதன்யா தற்போது லவ் ஸ்டோரி எனும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு செம்படம்பர் 6ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதையடுத்து அவர் விக்ரம் குமார் இயக்கும் தேங்யூ, எனும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தான் அவருக்கு ஜோடியாக பிரியாவை ஒப்பந்தம் செய்யும் முயற்சிகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.