விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் |
கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சின்னத்திரை படப்பிடிப்புகள் மற்றும் திரைப்படத்தின் முன் தயாரிப்பு மற்றும் பின் தயாரிப்பு பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. படப்பிடிப்புக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று பெப்சி கோரி உள்ளது.
இது தொடர்பாக பெப்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தக் கொரோனா ஊரடங்கு வேலை நிறுத்தத்தால் திரைப்படத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் துயர் துடைக்கும் விதமாக நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ. 80 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்கள். ஏற்கெனவே இவர்கள் சார்பில் மார்ச் மாதத்தில் ரூ 10 லட்சம், தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு வழங்கப்பட்டது. ஆக மொத்தம் ரூ 90 லட்சத்தை தொழிலாளர்களுக்கு வழங்கிய சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
இந்த 80 லட்ச ரூபாயையும் 20,000 தொழிலாளர்களுக்கு நேரடியாக தலா ரூ 400 வழங்குவதென முடிவு செய்துள்ளோம். இந்தப் பணம் வரும் திங்கட்கிழமை முதல் சங்கங்கள் மூலம் வழங்கப்படும்.
ஏற்கெனவே 6 மாதத்திற்கு மேலாக தமிழ்த் திரைப்படத்துறையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள். நிபந்தனைகளுடன் பணியாற்றுகிறோம். எங்களுக்குப் படப்பிடிப்பிற்கான அனுமதியைத் தாருங்கள் என அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
எங்கள் வேண்டுகோளை ஏற்று முதலில் இறுதிக்கட்டப் பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கியது. அரசு விதித்த அனைத்து நிபந்தனைகளையும் முழுமையாகப் பின்பற்றி, பணியாற்றி வருகிறோம் என்பதை அரசுக்குத் தெரிவிப்பதோடு, தமிழக முதல்வர் படப்பிடிப்பிற்கு அனுமதியளிக்குமாறு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.