'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! |
நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் அதிகாரி விஜயகுமார் சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கு போட்டியிட அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பின் பேரில் தலைவர் பதவிக்கு பாரதிராஜாவும், பொதுச்செயலாளர் பதவிக்கு டி.சிவாவும், துணை தலைவர்கள் பதவிக்கு தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு டி.ஜி.தியாகராஜனும், இணை செயலாளர்கள் பதவிக்கு சுரேஷ் காமாட்சியும், லலித்குமாரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இவர்களை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 12 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாக குழுவிற்கு 12 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் எஸ்.நந்தகோபால் எஸ்.மதன் , சி.வி.குமார், ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன், டில்லி பாபு, கார்த்திகேயன் சந்தானம், ஆர். கண்ணன். சுதன் சுந்தரம், விஜய் ராகவேந்திரா, கார்த்திகேயன், நிதின் சத்யா, பி.ஜி.முத்தையா ஆகியோர் நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேற்கண்ட தகவல்களை தேர்தல் அதிகாரி எம்.விஜயகுமார் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த புதிய சங்கத்திற்கே பல தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இவர்கள் போட்டியின்றி வேறு தேர்வானது மேலும் தயாரிப்பாளர்கள் இடையே அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.