பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
வசந்த் அண்ட் கோ உரிமையாளரும், எம்.பி.யுமான வசந்தகுமார் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். நேற்று சென்னையில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின் அவரின் சொந்த ஊரில் இன்று(ஆக.,30) நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில் நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், ''உழைக்கும் வர்க்கத்தின் உதாரணம். படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறுவது என்பதை எப்படியாவது இவரிடமிருந்து படித்துக் கொள்ள வேண்டும் தன்னம்பிக்கையற்ற ஒவ்வொருவரும். விளம்பரங்களில் பிராண்டின் முதலாளியே நடிக்கலாம் என துவக்கி வைத்தவர்.
கன்னியாகுமரி மக்களின் முன்னேற்றத்தை கனவு கண்டவர். அதற்காக உழைத்தவர். குடும்பத்தின் மீது செலுத்தும் தீவிர அன்பை வலிமையாக்கிக் கொண்டவர். சூட்ட நிறைய புகழாரங்கள் உண்டு. ஆனால் இவ்வளவு விரைவில் அவரை இழப்போம் என எண்ணியதே இல்லை. ஏற்க முடியாத இழப்பு இது. நண்பன் விஜய் வசந்தின் குடும்பம் இந்த பேரிழப்பை எப்படி தாங்கிக்கொள்ளப் போகிறதோ தெரியவில்லை.
வசந்த குமாரை இழந்துவாடும் குடும்பம், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், தொகுதி மக்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.