நயன்தாராவின் 75வது படம் தொடங்கியது | அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார் | ராணி முகர்ஜி படத்திற்கு நார்வே எதிர்ப்பு | காமெடி நடிகர் மீது பாலியல் புகார் | 1500 கோடி சொத்தை சுருட்டவே 2வது திருமணம் : பவித்ராவின் முன்னாள் கணவர் குற்றச்சாட்டு | இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் 'காந்தாரா' | அன்பே மகிழ்ச்சி, மகிழ்ச்சியே அன்பு - விக்னேஷ் சிவன் | 'பத்து தல' - சிம்பு பட டிரைலர்களில் புதிய சாதனை | ஒரு வருடத்தைக் கடந்த 'எகே 62' அறிவிப்பு : புதிய அறிவிப்பு எப்போது வரும் ? | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு |
எமன், காளி, இஸ்பேட்ட ராஜா இதய ராணி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஷில்பா மஞ்சுநாத். பெங்களூருவை சேர்ந்த மாடலான இவர், தமிழ் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இஸ்பேட்ட ராஜா படத்தை தொடர்ந்து தனக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால் கொரோனா பிரச்சினையின் காரணமாக திரைத்துறை முடங்கியதால், ஷில்பாவும் பெங்களூருவில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
மீண்டும் சினிமா படப்பிடிப்புகளை துவக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்து திரைத்துறையினர் படப்பிடிப்புகளை ஆரம்பிக்க ஆயத்தமாகி வருகின்றனர். எனவே தானும் ஆட்டத்துக்கு ரெடி என அறிவிக்கும் வகையில், கடந்த சில நாட்களாக தனது கிளாமர் படங்களை சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் ஷில்பா மஞ்சுநாத். அதைப்பார்த்த ரசிகர்கள், "ரைடக்டர்ஸ் நோட் பண்ணுங்க ப்ளீஸ்", என சிபாரிசு செய்து வருகின்றனர்.