Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓடிடியில் ரிலீசாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்?

29 ஆக, 2020 - 19:21 IST
எழுத்தின் அளவு:
Mookuthi-amman-may-be-release-in-OTT

தமிழ் சினிமாவில் தற்போது ஓடிடி மோகம் அதிதீவிரமாக பரவி வருகிறது. ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின் உள்ளிட்ட படங்களில் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30ம் தேதி ஓடிடியில் ரிலீசாகிறது.

சூர்யா போன்ற ஒரு மாஸ் ஹீரோவின் படமே தியேட்டரில் ரிலீசாகாமல் ஓடிடியில் நேரடியாக ரிலீசாக உள்ளதால், மற்ற ஹீரோ, ஹீரோயின்கள் எல்லாம் தங்கள் படத்தை ஓடிடியில் நேரடி ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளனர். தயாரிப்பாளர்களும் இதற்கு பெரும் ஆதரவு தருவதால் மேலும் பல படங்கள் ஓடிடி ரிலீசுக்கு வரிசைக்கட்ட ஆரம்பித்துள்ளன.

அந்த வகையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முழுமையாக முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே தயாரிப்பாளர் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.

தியேட்டர்கள் திறக்கப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருவதால் மூக்குத்தி அம்மன் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஒரு பெரிய ஓடிடி நிறுவனத்துடன், தயாரிப்பாளர் தரப்பும், ஆர்.ஜே.பாலாஜியும் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதி படம் : உறுதி செய்த டாப்சிவிஜய் சேதுபதி படம் : உறுதி செய்த ... கர்ப்பமாக இருக்கிறேனா? சமந்தா நச் பதில் கர்ப்பமாக இருக்கிறேனா? சமந்தா நச் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
30 ஆக, 2020 - 08:12 Report Abuse
Mirthika Sathiamoorthi அய்யொ இனிமே நயன்தாரப்படமும் தியேட்டரில் வெளியிட மாட்டோம்ன்னு திரைப்பட உரிமையாளர்கள் சொல்லிடப் போறாங்க. என்னது சொல்லமாட்டாங்களா..? ஒஹ்ஹஹ் சூரியா ஜோதிகா படத்துக்கு மட்டும் சொல்லுவாங்க..மத்தபடம் ஓடிடி யில் ரிலீசானலும் பரவாயில்லை கண்டுக்க மாட்டாங்க. புரியுது. தேங்க்ஸ்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in