Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் : பாரதிராஜாவின் சுயநலம் - அழகன் தமிழ்மணி விளாசல்

29 ஆக, 2020 - 19:12 IST
எழுத்தின் அளவு:
Producer-Azhagan-TamilMani-slams-Bharathiraja-and-New-producer-council

திரையுலகினர் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் தமிழ் திரையுலகில் முக்கியமான சங்கங்களான தயாரிப்பாளர்கள் சங்கமும், நடிகர்கள் சங்கமும் அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில் கொரோனா பிரச்னையால் நடக்க முடியாமல் போனது. இந்நிலையில் பாரதிராஜா தலைமையில் தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் உதயமானது. இதற்கு பல மூத்த தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் புதிய சங்கம் தொடக்கத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

இப்போது அந்த சங்கத்தின் தலைவராக பாரதிராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுச் செயலாளர்களாக டி.சிவா, துணை தலைவர்களாக தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, பொருளாளராக டி.ஜி.தியாகரன், இணை செயலாளர்களாக லலித்குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி தேர்வாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுப்பற்றி தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி கூறுகையில், ''

தயாரிப்பாளர் சங்கம் தாய்வீடு போன்றது. அதை பிரித்து எடுத்துக் கொண்டு போவது எந்த விதத்தில் நியாயம். இந்த நடப்பு சங்கத்தில் உள்ளவர்கள் யார் யார் எத்தனை படம் தயாரித்து உள்ளனர், இவர்கள் பங்கு என்ன? இவர்களுக்கு கடன் இல்லையா? ஒவ்வொருவர் பற்றியும் என்னால் விளக்கி பேச முடியும். நடிகர்கள் கால்ஷீட் பெற வேண்டும், போன்ற மற்ற விஷயங்களுக்காகவே தாய் சங்கம் உடைக்கப்பட்டுள்ளது.

நடப்பு சங்கமமாம். நடப்பு என்ற வார்த்தை எதற்கு பயன்படுத்தப்படுகிறது. இறந்த வீட்டில் பயன்படுத்தக்கூடிய வார்த்தை தான் காரியம், நடப்பு எல்லாம்.. நல்லா பெயர் வைத்தார்கள் இவர்கள். எப்போது கேட்டாலும் சொல்வேன், பாரதிராஜா தன் சுயநலத்துக்காக தொடங்கப்பட்ட சங்கமே தயாரிப்பாளர் நடப்பு சங்கம். என்றுமே தாய் வீட்டை யாரும் அழிக்க முடியாது, அழியாது என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கோகோ வீராங்கனையாக மாறும் தனுஷ் பட நாயகிகோகோ வீராங்கனையாக மாறும் தனுஷ் பட ... விஜய் சேதுபதி படம் : உறுதி செய்த டாப்சி விஜய் சேதுபதி படம் : உறுதி செய்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in