என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'அய்யப்பனும் கோஷியும்'.. ஒரு ஓய்வுபெற்ற இளம் ராணுவ அதிகாரிக்கும் ஒய்வு பெறப்போகும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் நடக்கும் நான்ஸ்டாப் ஈகோ யுத்தம் தான் இந்தப்படத்தின் கதை. இந்தப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் கைப்பற்றியுள்ளார். தெலுங்கு, இந்தி ரீமேக் உரிமைகளும் கூட ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டன.
தமிழில் பிஜுமேனன் மற்றும் பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரங்களில் சரத்குமார்-சசிகுமார், சசிகுமார்-ஆர்யா என்று காம்பினேஷன்கள் யூகமாக பேசப்பட்டு வந்தத.. ஆனால் இதில் பார்த்திபன்-கார்த்தி இருவரும் நடிக்க வேண்டும் என்பதுதான் இந்தப்படத்தை இயக்கிய மறைந்த இயக்குனரும் கதாசிரியருமான சாச்சியின் விருப்பமாக இருந்தது. இது குறித்து பார்த்திபனும் அந்த சமயத்தில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்..
ஆனால் தற்போது “பார்த்திபனும், கார்த்தியும் இந்தப்படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது” என செய்தி வெளியானது. இந்த செய்தியை புகைப்படமாக தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள பார்த்திபன், “இச்செய்தி நற்செய்தி ஆகலாம்.. ஆனால் இதுவரை தயாரிப்பாளர் கதிரேசனை தவிர அனைவரும் என்னிடம் பேசிவிட்டார்கள்.. எனவே..” என பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் தயாரிப்பாளர் கதிரேசன் இன்னும் பார்த்திபனிடம் இதுகுறித்து பேசவில்லை என்பது உறுதியாகவே தெரிந்துவிட்டது.. அதனால் தான் பார்த்திபன் கூட, “எல்லோரும் பேசிவிட்டார்கள்.. எனவே..” என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம் இனி தயாரிப்பாளர் கதிரேசன் வந்து பேசட்டும்.. மற்றவர்கள் இதுபற்றி பேசவேண்டாம்” என தனது வருத்தத்தை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாகவே தெரிகிறது.