ஜுன் 2ல் இரண்டு படங்களுக்கே முக்கிய போட்டி | மாவீரன் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது | யாஷிகா ஆனந்த் - அஜித் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி காதலா...? | 37 ஆண்டுகளை நிறைவு செய்த 'விக்ரம்' | பாபா படத்தை தொடர்ந்து மற்றொரு ரஜினி படம் ரீ ரிலீஸ் | கதாநாயகன் ஆகும் பிக்பாஸ் பிரபலம் | மும்பையில் தனுஷ்... மீண்டும் ஒரு பாலிவுட் படம் | த்ரிஷா படத்தில் கெஸ்ட் ரோலில் மூன்று பிரபல ஹீரோக்கள் | நாயகன் படம் போன்று இருக்கும் : கமல் | 150 வயது வரை வாழும் வித்தை எனக்கு தெரியும் : சரத்குமார் |
பரத் கம்மா இயக்கத்தில், தமிழ் இசையமைப்பாளரான ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, விஜய் தேவரகொன்டா, ராஷ்மிகா மற்றும் பலர் நடித்து தெலுங்கில் 2019ம் ஆண்டு வெளிவந்த படம் 'டியர் காம்ரேட்'. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றி பெறாமல் மிகச் சுமாராக மட்டுமே ஓடியது.
இப்படத்தை ஹிந்தியில் அதே பெயரில் டப்பிங் செய்து, ஜனவரி மாதத்தில் யு-டியூபில் வெளியிட்டார்கள். இந்த ஏழு மாதங்களில் இப்படம் 160 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அது மட்டுமல்ல யு-டியூபில் முதல் முறையாக 2 மில்லியன் லைக்குகளைப் பெற்ற படம் என்ற புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.
தமிழ், தெலுங்குப் படங்கள் பெரும்பாலும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு, இப்படி யு-டியூபில் வெளியிடப்படுகின்றன. ஆனால், தமிழ்ப் படங்களைக் காட்டிலும் தெலுங்குப் படங்களுக்குத்தான் அங்கு அதிக வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக அல்லு அர்ஜுன் படங்கள் அதிகப் பார்வைகளைப் பெறும்.
அல்லு அர்ஜுன் நடித்து ஹிந்தியில் இப்படி டப்பிங் ஆகி யு-டியுபில் வெளியான 'சர்ரைனோடு' படம் 304 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஆனால், அப்படத்திற்குக் கூட 1.1 மில்லியன் லைக்குகுள்தான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.