என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
கல்கி எழுதிய பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பலர் படமாக்க தொடங்கி பின்னர் கைவிட்டனர். தற்போது மணிரத்னம் லைக்கா நிறுவனத்தின் உதவியுடன் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறார்.
இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், த்ரிஷா. பிரபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் முக்கிய கதாபாத்திரத்தில் சைவம் பட நடிகை பேபி சாரா நடிக்க உள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வனில் நடிகர் நிழல்கள் ரவி ஒப்பந்தமாகியிருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: பொன்னியின் செல்வனில் சின்ன பழுவேட்டரையர் கேரக்டரில் நடிக்க இருக்கிறேன். எனது பகுதி கடந்த பிப்ரவரி மாதமாக படமாவதாக இருந்தது. இதற்கு நான் என்னை தயார்படுத்தி இருந்தேன். கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிபோய் விட்டது. அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். என்கிறார் நிழல்கள் ரவி.