மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
பிரபல தொழில் அதிபர் எச்.வசந்தகுமார். காங்கிரஸ் கட்சியின் பிரமுகர். எம்.எல்.ஏ., எம்.பி.ஆக இருந்தார். நடிகர் விஜய் வசந்த், தயாரிப்பாளர் வினோத்குமார் ஆகியோரின் தந்தை. தனது தொகுதியில் மக்கள் பணியாற்றிக் கொண்டிருந்த வசந்தகுமாருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்தபோது வசந்தகுமாருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆகஸ்டு 10-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிக்சை பலன் இன்றி வசந்தகுமார் இறந்தார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினி உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்.
ரஜினி
ரஜினி தனது இரங்கல் செய்தியில், "அருமை நண்பர் வசந்தகுமாரின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கமல்
கமல் டுவிட்டரில், ''நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த வசந்தகுமார் மறைவு தமிழகத்திற்கே இழப்பு''. என பதிவிட்டுள்ளார்.
ராதாரவி
''அண்ணன் வசந்தகுமார் எம்பி காலமாகிவிட்டார் என்ற செய்திக் கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். அவர் மீண்டு வந்துவிட வேண்டும் என்று மனம் மிகவும் ஏங்கியது. எனது குடும்ப நண்பரை இழந்துவிட்டேன். ஒட்டுமொத்த தமிழகத்துக்கே அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஏனென்றால், ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் கலந்துவிட்டவர். நம் வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு பொருள் அவரை நினைவுப்படுத்தும். அந்தளவுக்கு தமிழகத்தில் வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தார். மேலும் அவர் எனக்கு தயாரிப்பாளரும் கூட ,அவர் தயாரித்த படத்தில் நான் நடித்துள்ளேன்.
தன் வாழ்நாளில் அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் என அனைத்தையும் சீரான முறையில் கையாண்டவர் வசந்தகுமார். எப்போது சென்றாலும் சிரித்த முகத்துடன் வரவேற்பவர். அவர் முகத்தில் சிரிப்பு இல்லாமல் நான் பார்த்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு புன்னகையுடனே இருந்தவர். இப்போது அந்த சிரிப்பு இல்லாத முகத்தை நான் எப்படி காண்பேன். பணிவானவர், நேர்மையானவர், தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர் என வசந்தகுமாரைப் பற்றி வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அவரது இழந்து வாடும் அவருடைய அண்ணன் குமரி ஆனந்தன், அண்ணன் மகளும் தெலுங்கானா கவர்னருமான தமிழிசை செளந்தரராஜன், மகன்கள் விஜய்வசந்த், வினோத்,
மகள் தங்க மலர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வசந்த் அண்ட் கோ ஊழியர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்'' என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா
உழைப்பால் உயர்ந்த பல தமிழர்களில் முக்கியமானவர் வசந்தகுமார். பனங்காட்டு மண்ணில் பிறந்தவர். என் பள்ளிக்கூட நாட்களில் அவரது அண்ணன் குமரி அனந்தன் எங்கு பேசினாலும் அவரது பேச்சை ரசிப்பேன். அதன்பிறகு வசந்தகுமாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். கடின உழைப்பாளி, புத்திசாலியான மனிதர், அன்பானவர். எல்லோருக்கும் எல்லா பொருளும் கிடைக்க வேண்டும் என தவணை முறையில் வீட்டு உபயோக பொருட்களை வழங்கியவர். வசந்த் அண்ட் கோ என்றால் உலகம் முழுவதும் அவரை தெரியும். அவருக்கும் இப்படியொரு நிலைமையா.? இந்த கொரோனாவிற்கு அவ்வளவு வலிமை உள்ளதா, எத்தனை நல்லவர்களை கொண்டு போகிறது. பயமாக உள்ளது. வியாபாரம் என்பதையும் தாண்டி நல்ல மனிதர், கடமை உணர்வு உள்ளவர், பொது சேவை செய்பவர். அவரது இழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. வசந்த குமார் உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும். உங்களது வாரிசுகள் உங்கள் பெயரை காப்பாற்ற வேண்டும். உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்கள் உங்கள் பெயரை நிலை நிறுத்துவார்கள் என பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சுசீந்திரன்
''வீரவணக்கம் ! மக்கள் நலபணியில் ஈடுபட்டு
கோவிட்19ஆல் உயிர் நீத்த நாடாளுமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் அவர்களுக்கு,
எனது வீரவணக்கத்தை செலுத்திக்கொள்கிறேன். அய்யா அவர்களை பிரிந்து வாடும்
எங்கள் கலைத்துறையை சார்ந்த விஜய் வசந்த் நண்பர்க்கும், தொண்டர்கள்,
குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை கூறிக்கொள்கிறேன்''
என இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன்
டுவிட்டரில், ''வசந்தகுமார் அய்யா இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். எனது அருமை நண்பர் விஜய் வசந்த் மற்றும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்'' என சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.
வெங்கட்பிரபு
''இந்த செய்தி பொய்யாக இருந்திருக்க கூடாதா.? சகோதரர்கள் விஜய் வசந்த் மற்றும், வினோத் ஆகியோருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். தைரியமாக இருங்கள்''. என பதிவிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட்பிரபு.