சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
மோகன்ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்த படம் 'தனி ஒருவன்'. ரீமேக் படங்களையே இயக்கி வந்த மோகன்ராஜா முதல் முறையாக சொந்தமாகக் கதை எழுதி இயக்கிய படம் இது. ஒரு தரமான ஆக்ஷன் த்ரில்லர் படமாக அமைந்த இந்தப் படம் தனி முத்திரையைப் பதித்து பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டுமென இயக்குனர் மோகன்ராஜாவுக்கு பலரும் வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து அவரும் அதற்கான வேலைகளில் இறங்கினார். தற்போது அதற்கான கதையை அவர் முழுவதும் எழுதிவிட்டதாகத் தெரிகிறது. விரைவில் படத்தின் அறிவிப்பை வெளியிட உள்ளோம் என நேற்று தெரிவித்துள்ளார்.
நேற்று இப்படம் வெளிவந்த ஐந்தாவது ஆண்டு கொண்டாட்டத்தினை ரசிகர்கள் கொண்டாடினர். அப்போது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஹரிஷ் உத்தமன் இயக்குனர் மோகன்ராஜாவிடம் 'சார் தனி ஒருவன் 2 ?' எனக் கேட்டிருந்தார். அதற்கு மோகன்ராஜா விரைவில் 'தனி ஒருவன் 2' அப்டேட் வரும் என்று பதிலளித்திருக்கிறார்.