Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபாஸ் பட இயக்குனர்களுக்குள் பனிப்போர் ?

28 ஆக, 2020 - 10:46 IST
எழுத்தின் அளவு:
clash-between-prabhas-movie-directors

பாகுபலி படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகராக பிரபாஸ் மாறிவிட்டார். அவர் அடுத்து நடித்து வெளிவந்த சாஹோ படம் மற்ற மொழிகளில் தோல்வியைத் தழுவினாலும் ஹிந்தியில் மட்டும் வசூலை அள்ளியது. அவருக்கு ஹிந்தியில் உள்ள மார்க்கெட்டையும், வரவேற்பையும் மற்றவர்களுக்கும் புரிய வைத்தது. அதனால், பிரபாஸை ஹிந்திப் படங்களில் நடிக்க வைக்க பலரும் ஆர்வம் காட்டினார்கள்.




பிரபாஸ் தற்போது ராதேஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவரது 21வது படத்தை மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்க உள்ளார். இப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க உள்ளார். ராதேஷ்யாம் படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின் இப்படத்தில் தான் பிரபாஸ் நடிக்கப் போவார் என்று எதிர்பார்த்திருந்தார்கள்.

ஆனால், திடீரென ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் ஆதிபுருஷ் படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. அப்படத்தின் இயக்குனர் ஓம் ராவத் ஜனவரி 2021 முதல் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனக் கூறியுள்ளார். இந்த விவகாரம் பிரபாஸின் 21வது படத்தை இயக்கும் நாக் அஸ்வினுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.




ராதேஷ்யாம் முடிந்தபின் தன் படத்தில்தான் பிரபாஸ் நடிக்க வருவார் என்று அவர் நினைத்திருந்த நிலையில் ஓம் ராவத் அறிவிப்பு அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். இதனால், இருவருக்கும் இடையே பனிப்போர் ஆரம்பமாகியுள்ளது என்கிறார்கள்.


இந்த சிக்கலை பிரபாஸ்தான் தீர்த்து வைக்க முடியும். ஆனால், அவரோ ஆதிபுருஷ் படத்திற்கான பயிற்சியில் இறங்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புதிய இசை அமைப்பாளருக்கு உதவிய அனிருத்புதிய இசை அமைப்பாளருக்கு உதவிய ... 4000 ரூபாய் கேக்கை வெட்டிய சூரி 4000 ரூபாய் கேக்கை வெட்டிய சூரி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in