‛அட்டக்கத்தி' தினேசுக்கு அடுத்த பரீட்சை | எனக்கு கவின் சிபாரிசு செய்தார் : உண்மையை போட்டு உடைத்த அபர்ணா தாஸ் | எனது திருமணம் ஒரு விசித்திர கதை: ஹன்சிகா | நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் |
'குறை சொல்லியே பேர் வாங்குபவர்களும் உண்டு' என்ற திருவிளையாடல் பட வசனம் மாதிரி, எப்போதும் யாரைப் பற்றியாவது ஏடாகூடமாக விமர்சித்தே ஊடக வெளிச்சத்தில் இருப்பவர் மீரா மிதுன். தன்னைத் தானே சூப்பர் மாடல் என அழைத்துக் கொள்ளும் மீரா, சமீபகாலமாக திரைத்துறை பிரபலங்களை மோசமாக விமர்சித்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதோடு தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஆபாசமான கருத்துக்களையும் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
விஜய் மற்றும் சூர்யாவை விமர்சித்து மீரா மிதுன் வெளியிட்ட கருத்து தொடர்பாக, அவர்களது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மீரா மிதுனின் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய ரசிகர்கள், மீரா மிதுன் மீது போலீசிலும் புகார் அளித்துள்ளனர். ஆனாலும் மீரா மிதுன் அமைதியாகவில்லை.
இந்நிலையில் கைலாசா நாணயத்தை வெளியிட்டுள்ள நித்தியானந்தாவை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். அதில், “அனைவரும் அவரை கிண்டல் செய்தார்கள், அனைவரும் அவரை விளாசினார்கள். அனைவரும் அவரை தரக்குறைவாக பார்த்தார்கள். அனைத்து மீடியாக்களும் அவருக்கு எதிராக இருந்தன. ஆனால் இன்று அவர் கைலாசா எனும் புதிய நாட்டை உருவாக்கியுள்ளார். விரைவில் கைலாசாவுக்கு செல்ல விரும்புகிறேன். லாட்ஸ் ஆப் லவ்” என மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், 'தயவு செய்து அங்கே சென்று விடுங்கள். நாங்களாவது நிம்மதியாக இருப்போம்' என கலாய்த்து வருகின்றனர்.