இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
தமிழில் அமரகாவியம், ஒருநாள் கூத்து, இன்று நேற்று நாளை உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ். மேலும் தற்போது விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். தற்போது திருமணத்துக்கு தயாராகிவிட்ட மியா ஜார்ஜ், கோட்டயத்தை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் பிலிப் என்பவரைத்தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்
கடந்த ஜூன் மாதம் மியா ஜார்ஜின் திருமண நிச்சயதார்த்தம் மிக எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில் தற்போது கேரளாவில் உள்ள பாலாவில் உள்ள சர்ச் ஒன்றில் சற்று விமரிசையாகவே நடைபெற்றது.
இதுகுறித்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ள மியா ஜார்ஜ், “என்னை பெண் பார்க்க வந்த முதல் நபர் ஒரே நபர் அவர் மட்டும் தான். அவருடனேயே எனது திருமணம் நிச்சயமானதில் மிக்க மகிழ்ச்சி.. எல்லோரும் அவரை அப்பு என்று அழைக்கிறார்கள்.. நானும் கூட அப்படித்தான்..” என கூறியுள்ளார்...அதேசமயம் இவர்களது திருமண தேதி பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை.