Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர் ஹரிக்கு 'அருவா' டிராப் கோபமா?

26 ஆக, 2020 - 12:39 IST
எழுத்தின் அளவு:
Did-Hari-angry-with-Suriya

சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' படம் ஒடிடியில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளிவந்ததிலிருந்தே திரையுலகத்தில் ஒரு பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.

தியேட்டர்காரர்கள் தரப்பிலிருந்து சூர்யாவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்ற சூழல் தெளிவாகத் தெரியாத நிலையில் பல படங்களை ஓடிடி தளத்தில் வெளியாகத் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் சூர்யாவின் படத்திற்கு மட்டும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சூர்யாவுடன் இணைந்து சில வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள இயக்குனர் ஹரியும் சூர்யாவுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ''உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள்... ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதே எனக்கு மகிழ்ச்சி, ஓடிடியில் அல்ல. தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால்தான், நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம்.

சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால், தியேட்டர் என்கிற கோயிலில் இருந்தால் தான் அதற்கு மரியாதை. தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்'' என தெரிவித்துள்ளார்.

இது திரையுலகத்தில் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது. ஹரி இயக்க சூர்யா நடிப்பதாக இருந்த 'அருவா' படம் டிராப் என்ற நிலையில் உள்ளது. அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தால் தான் சூர்யாவுக்கு எதிராக இப்படி ஒரு அறிக்கையை ஹரி வெளியிட்டுள்ளார் என்கிறார்கள்.

எவ்வளவு எதிர்ப்பு அறிக்கைகள் வந்தாலும் சூர்யா தரப்பில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை என்பதுதான் உண்மை.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
புரட்சித் தலைவர் விஜய், புரட்சித்தலைவி சங்கீதா - மதுரையில் முளைத்த போஸ்டர்: அதிமுக அதிர்ச்சி!புரட்சித் தலைவர் விஜய், ... முதல் வரனே மாப்பிள்ளை ஆனார் ; மகிழ்ச்சியில் மியா முதல் வரனே மாப்பிள்ளை ஆனார் ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Anbilkathiravan - Trichy,இந்தியா
27 ஆக, 2020 - 15:59 Report Abuse
Anbilkathiravan சூர்யா செய்வது சரியே ....
Rate this:
Sankarm Sankar - Chennai,இந்தியா
27 ஆக, 2020 - 13:25 Report Abuse
Sankarm Sankar தியேட்டரில் வெளியிடவேண்டும் என்று கூறும் நல்லவர்கள், தியேட்டரில் டிக்கெட், கேன்டீன், பார்க்கிங் கட்டணம் இவற்றை பற்றி பேசுவார்களா, தியேட்டர் போகும் ஆசையை தியேட்டர்கள் கெடுத்து கொள்கிறார்கள்,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in