வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் | தரக்குறைவாக விமர்சித்த நெட்டிசன்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி |
மதுரை : நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆர்.,ஆகவும், அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதாவாகவும் சித்தரித்து மதுரையில் போஸ்டர் ஒட்டியிருப்பது அதிமுக.,வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கொரோனா காலமாக இருந்தாலும் கூட அரசியல் கட்சியினர் தேர்தலை எதிர்நோக்கி வேலைகளை துவங்கிவிட்டனர். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் துவங்க ஆரம்பித்து விட்டது. புதிதாக ரஜினியும், கமலும் வேறு களத்தில் இறங்க உள்ளனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எதிர்காலத்தில் அரசியல் கனவோடு விஜய் இருக்கிறார். அதனால் தனது மக்கள் இயக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணத்திலும் உள்ளார். இந்நிலையில் மதுரையில் விஜய்யின் திருமண நாளையொட்டி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை தெற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் கில்லி சிவா என்பவர் ஒட்டியுள்ள இந்த போஸ்டரில் விஜய்யை, எம்.ஜி.ஆர்., ஆக சித்தரித்து புரட்சித் தலைவர் நடிகர் விஜய் என்றும், சங்கீதாவை ஜெயலலிதாவாக சித்தரித்து புரட்சித்தலைவி சங்கீதா என்றும் இடம் பெற்றுள்ளது.
தங்கள் தலைவர் எம்ஜிஆரையும், தங்கள் தலைவி ஜெயலலிதாவையும் இணைத்து விஜய் ரசிகர்கள் பயன்படுத்தியது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.