சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இன்று பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் விஜே சித்து. சரவணன் மீனாட்சி, சின்னப் பாப்பா பெரிய பாப்பா போன்ற சீரியல்கள் மூலம் மக்களிடையே மேலும் பிரபலமானார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் சித்து, மணப்பெண் அலங்காரத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். சமீபகாலமாக நடிகைகள் போட்டோஷூட் நடத்துவது அதிகரித்து வருகிறது. சித்துவும் கூட நீச்சல்குளத்தில் நடத்திய போட்டோஷூட் வைரலானது. அந்தவகையில் இதுவும் மணப்பெண் அலங்கார போட்டோஷூட்டாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் உண்மை அது இல்லை. சித்துவுக்கும், தொழிலதிபர் ஹேமந்த் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நிச்சயதார்த்தத்திற்கு சித்து தயாரான போட்டோ மற்றும் வீடியோக்களும், மணமக்கள் இருவரும் மேடையில் கழுத்தில் மாலையுடன் இருக்கும் போட்டோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இந்த வருட இறுதிக்குள் சித்துவின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொடர்ந்து அவர் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிப்பாரா என்ற கவலை, இப்போதே அவரது ரசிகர்களுக்கு வந்து விட்டது. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடியுங்கள் சித்து என வாழ்த்துக்களுடன் சேர்த்து கோரிக்கைகளையும் முன்வைக்கத் தொடங்கி விட்டனர் ரசிகர்கள்.