யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் | குட்டையான உடை அணிந்து குத்தாட்டம் போட்ட ஸ்ரீநீதி! | 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் அசத்திய தமிழ் திரைப்படம் |
நடிகை வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால், திடீர் நெஞ்சு வலியால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நடிகர் விஜயகுமார் மகளான வனிதா, சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தற்போது, இவர், போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் வசித்து வருகிறார்.
நடிகை வனிதா கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை, மூன்றாவது திருமணம் செய்தார். இது குறித்து, வலைதளங்களில் விவாதங்களே நடந்து, போலீஸ் புகார், கைது நடவடிக்கை வரை சென்றது.
இந்நிலையில், நடிகை வனிதாவின் கணவர் பீட்டர் பாலுக்கு, திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து வனிதா டுவிட்டரில், ''திருமணம் என்பது நீங்கள் செய்ததற்கான சட்ட ஆவணம் மட்டும் கிடையாது. இரு இதயங்களின் இணைப்பு. திருமணமோ, விவாகரத்தோ பலருக்கு அது ஒரு காகிதம் மட்டுமே. ஆனால் மகிழ்ச்சி, துன்பம் போன்றவை அந்த இரண்டு பேர்கள் உடையது. 2020ல் நானும், பீட்டர் பாலும் பல உணர்வுகளை எதிர்கொண்டோம். நிறைய சிரித்தோம், அழுதோம், நேசித்தோம், போராடினோம். ஒரு கொரோனாவோ அல்லது வெறுப்பாளர்களால் எங்களை பிரிக்க முடியாது.
நேற்றைய தினம் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள். எங்களின் வலிமையை, ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பை கடவுள் சோதித்து பார்க்கிறார். அற்புதங்கள் நிகழும். அவருக்காக நான், எனக்காக அவர் என வாழ்கிறோம். எது நடந்தாலும் அதில் ஒரு விஷயத்தை கடவுள் செய்வார். வாழ்க்கை கடினமானது, அதை எதிர்கொள்ளுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.
எங்களை சுற்றி இருந்த அனைத்து குழப்பங்களுக்கும் மத்தியில் ஜுன் 27, 2020 அன்று மோதிரம் மாற்றிக் கொண்டோம். பீட்டர் பால் நல்ல மனிதர். உங்கள் இதயங்களை நிச்சயம் வெல்வார். சாதிக்க பிறந்தவர், அவர் நிச்சயம் குணமாகி வருவார் என கடவுளை மட்டுமே நம்புகிறேன். எங்கள் மீது அன்பு கொண்டு நலம் விசாரித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி. இந்த உலகம் நமக்கானது. வாழ்க்கை குறுகியது மற்றும் கணிக்க முடியாத ஒன்று. ஆகவே வாழு வாழ விடு. அன்பை பரப்புவோம், எதிர்மறை எண்ணங்களை புறக்கணிப்போம்'' என தெரிவித்துள்ளார்.