Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா காலத்தில் திரில்லர் கதையில் ரைசா - கார்த்திக் ராஜு இயக்கம்

25 ஆக, 2020 - 17:31 IST
எழுத்தின் அளவு:
Raiza-wilson-in-thriller-story

சூர்ப்பனகை படத்தை இயக்கி வந்த கார்த்திக் ராஜு, கொரோனா பிரச்னையால் அப்படத்தை நிறுத்தி வைத்துள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் குறைந்த தொழிலாளர்களை கொண்டு பணி செய்யும் விதமாக மற்றொரு கதையை எழுதி, அதை படமாக்கியும் முடித்துவிட்டார்.

இயக்குனர் கூறுகையில், ''இது ஒரு தாய், மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோரை பற்றிய படம். ரைசா வில்சன், ஹரீஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், மோனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உணர்வுப்பூர்வமாக த்ரில்லர் பாணியில் இந்தப் படம் இருக்கும்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் இந்தக் கதைக்கு ஏற்ற களமாக இருந்தது. கொரோனா தொற்று இல்லாத அந்த கிராமத்தில் 500-க்கும் குறைவான குடும்பங்களே வசிக்கிறார்கள். படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பும் நடிகர்கள், படக்குழுவினர் உட்பட 28 பேருக்கும் கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்டது. முழுபடப்பிடிப்பும் முடித்து திரும்பிவிட்டோம், தற்போது எடிட்டிங் வேலைகளும் முடிந்துவிட்டது. டப்பிங் பணிகள் இன்று(ஆக.,25) தொடங்குகிறது. ஒளிப்பதிவு: வேல்ராஜ், இசை : சாம்.சிஎஸ். விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. கண்டிப்பாக பார்வையாளர்களை அடுத்தக் காட்சி என்ன என்று யூகிக்க முடியாத நிலையிலும், காமெடியுடனும் இந்த த்ரில்லர் இருக்கும். சூர்ப்பனகை தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மா இந்தப்படத்தையும் தயாரிக்கிறார் என்றார் கார்த்திக் ராஜு.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
முன்னணி நடிகைகள் கூட இப்படி செய்ய மாட்டார்கள் !!முன்னணி நடிகைகள் கூட இப்படி செய்ய ... உடற்பயிற்சியில் அசத்தும் தந்தை - மகன் உடற்பயிற்சியில் அசத்தும் தந்தை - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

குச் குச் குச் குச் குச் குச் acid ஊற்ற வேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in