Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடும்ப விழாக்களுக்கே போகாதவர்கள், தியேட்டர்களுக்கு வருவார்களா?

25 ஆக, 2020 - 11:42 IST
எழுத்தின் அளவு:
Did-people-comes-to-theatres

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த ஐந்து மாத காலத்திற்கும் மேலாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்களைத் திறக்க வேண்டுமென கடந்த ஓரிரு மாதங்களாக தியேட்டர்கள் தரப்பில் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

செப்டம்பர் மாதம் முதல் தியேட்டர்கள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால், அடுத்த சில மாதங்களுக்குத் தியேட்டர்கள் திறப்பு இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாநிலங்களில் தியேட்டர்களைத் திறக்க ஆதரவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி கொடுங்கள் என்ற கோரிக்கை எழவில்லை.

குடும்ப விழாக்கள், உறவினர்களின் இறுதிச் சடங்குகள் ஆகியவற்றிற்குக் கூட பலர் செல்வதில்லை, தவிர்த்து விடுகிறார்கள். அப்படியிருக்க அவர்கள் எப்படி தியேட்டர்கள் பக்கம் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியும் என கேள்வி எழுப்புகிறார்கள்.

ஒருவேளை அரசு அனுமதி அளித்து மற்ற மாநிலங்களில் தியேட்டர்களைத் திறந்தாலும், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை என்றால் தமிழ்நாட்டிலும் அதன் பாதிப்பு எதிரொலிக்கும். பல தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு அங்கு வெளியாகும். எனவே, தமிழில் மட்டும் வெளியிட்டுவிட்டு தெலுங்கில் பட வெளியீட்டை தள்ளிப் போட மாட்டார்கள்.

அப்படியே தியேட்டர்கள் திறந்தாலும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற தியேட்டர்காரர்களுக்கு அதிக செலவு பிடிக்கும். அதற்கான கட்டணைத்தை வசூலித்தால் டிக்கெட் கட்டணங்களின் விலை மேலும் அதிகரிக்கும். ஏற்கெனவே, மக்கள் தியேட்டர்களுக்கு வருவது குறைந்துள்ள நிலையில், அது மேலும் குறையும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

தியேட்டர்கள் திறப்பு பற்றி ஒவ்வொரு நாளும் தியேட்டர்காரர்களின் கவலை அதிகரித்துதான் வருகிறதே தவிர, குறையவில்லை. இந்த கொரோனா பிரச்சினை என்றைக்கு முடிவுக்கு வருமோ என ஏக்கத்துடனேயே இருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
300 கி.மீ பைக்கில் பயணம் செய்த சம்யுக்தா ஹெக்டே300 கி.மீ பைக்கில் பயணம் செய்த ... ஓடிடி ரிலீஸ்: அடுத்தடுத்து புதிய படங்கள்? ஓடிடி ரிலீஸ்: அடுத்தடுத்து புதிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

R.K.RAMAN - chennai,இந்தியா
26 ஆக, 2020 - 13:07 Report Abuse
R.K.RAMAN The days of people visiting to theaters to see movies is fast approaching for a full stop The days of seeing movies in the house itself thru online options are fast approaching It is time for change Changes for forward motion we must be ready to face and to accept the changes that are coming
Rate this:
Kundalakesi - Coimbatore,இந்தியா
26 ஆக, 2020 - 10:27 Report Abuse
Kundalakesi Convert all theaters into Amazon godown..
Rate this:
26 ஆக, 2020 - 12:30Report Abuse
பூண்டுYaara nee komali...
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
26 ஆக, 2020 - 07:32 Report Abuse
siriyaar அவங்க வேற இவங்க வேற , ஒழுக்கமற்றவர்கள் சதவிகிதம் அதாவது பெரியார் வழித்தோன்றல்கள் தமிழ்நாட்டில் நிறைய உள்ளனர் அவங்களுக்கு சினிமா உயிரை விட பெரியது, உண்மையான சிங்கத்தைவிட சூர்யா சிங்கத்தை கண்டு நம்புபவர்கள் பகுத்தறிவு பெற்ற அளவுக்கு மீறிய புத்திசாலிகள்.
Rate this:
Ram - ottawa,கனடா
26 ஆக, 2020 - 11:38Report Abuse
Ramசரியாக சொன்னீர்கள்...
Rate this:
மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயம் இலவச சினிமா. நான் ஆட்சிக்கு வந்தால் கட்டணமில்லா சினிமா காண்பிப்பேன்.
Rate this:
Prakash - Chennai,இந்தியா
25 ஆக, 2020 - 19:15 Report Abuse
Prakash முதல் டிக்கெட் வாங்குபவர்கள் நன்தாராவுடன் செல்பி எடுத்துக்கொள்ளளலாம் என்று விளம்பரபடுத்தி பாருங்கள்.
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in