சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
திரைப்பிரபலங்கள் பெரும்பாலும் தங்களது வாரிசுகளை ஊடக வெளிச்சம் படாதவாறு வளர்ப்பதில் அதிக கவனமாக இருப்பார்கள். இதனாலேயே அவர்களது சாதாரண புகைப்படம் கூட வைரலாகி விடும். அதிலும் தனுஷின் மகன், சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேரன் என்றால் சும்மா?
நடிகர் தனுஷ் தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுடன் மொட்டை மாடியில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனது மூத்த மகன் தன் டிசர்ட்டை அணியும் அளவுக்கு வளர்ந்து விட்டதாக ஆச்சர்யத்துடன் அந்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
உண்மையில் அவரைப் போலவே அவரது ரசிகர்களும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்துள்ளனர். தனுஷுக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கிறார்களா என அந்தப் புகைப்படத்தைப் பார்த்து அவர்கள் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் அந்தப் புகைப்படத்தில் தனுஷைப் பார்த்தால் அவ்வளவு பெரிய பையன்களுக்கு அப்பா மாதிரி தெரியவில்லை. யாத்ராவின் நண்பர் போன்று சின்னப் பையனாக இளமையாக தோற்றமளிக்கிறார் என்று பாராட்டி வருகின்றனர். இன்னும் சிலரோ யாத்ராவைப் பார்த்தால் கூடிய விரைவில் தாத்தா ரஜினி, அப்பா தனுஷ் மாதிரியே ஹீரோவாகி விடுவார் போலவே என ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.