Advertisement

சிறப்புச்செய்திகள்

தயாரிப்பாளர் கே முரளிதரன் மறைவு | ஏ.ஆர்.ரஹ்மானின் லீ மஸ்க் படத்தை பார்த்த ரஜினிகாந்த் | உச்சநட்சத்திரத்தை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியல் : பாராட்டுகளால் இயக்குநர் நெகிழ்ச்சி | தனலெட்சுமியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள் : பதிலடி கொடுத்த ஜூலி | 2022 டிசம்பரில் இவ்வளவு படங்கள் வெளியாகுமா? | 'டிமான்டி காலனி 2' படப்பிடிப்பு ஆரம்பம் | தி காஷ்மீர் பைல்ஸ் படம் கற்பனை என்று நிரூபித்தால் படம் இயக்குவதை நிறுத்தி விடுகிறேன் : இயக்குனர் சவால் | மண்சார்ந்த படங்களையே உயிர் உள்ளவரை எடுப்பேன் : தங்கர் பச்சான் | முதல்வர் வேடத்தில் விஜய்சேதுபதி? | தேசிய திரைப்பட கழகத்துக்காக படம் தயாரிக்கிறார் லிங்குசாமி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வதந்தி பரப்பாதீங்க - அப்பா உடல்நிலை சீராக உள்ளது : எஸ்.பி.பி.சரண்

24 ஆக, 2020 - 13:58 IST
எழுத்தின் அளவு:

சென்னை: கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என்று வதந்தி பரவுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எஸ்.பி.பி.,க்கு இன்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்ததாக சில தமிழ் மீடியாக்களில் செய்தி வெளியானது. சமூக வலைதளங்களிலும் இது பரவியது.

இதனையடுத்து எஸ்.பி.பி., மகன் எஸ்.பி.பி.சரண் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் வணக்கம். வழக்கமாக மருத்துவமனை டாக்டர்களுடன் ஆலோசனைக்கு பிறகே, எனது தந்தையின் உடல்நிலை குறித்து தகவலை வெளியிடுவேன். ஆனால், எதிர்பாராதவிதமாக, இன்று காலையிலேயே வெளியிட வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது. எனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவல் முதலில் எனக்கு மட்டும் தான் வரும். அதன் பிறகே நான் மீடியாவிற்கு தகவல் தெரிவிப்பேன்.

ஆனால், எனது தந்தைக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாக சில மீடியாக்களில் வதந்தி பரவி வருகிறது. கொரோனா பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் என்பதை தாண்டி, எனது தந்தையின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. எக்மோ, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இதன் மூலம் அவரது நுரையீரலை குணப்படுத்தும் என நம்புகிறோம். எனவே வதந்தி பரப்புவதை நிறுத்துமாறு கேட்டு கொள்கிறேன். டாக்டருடன் ஆலோசனை நடத்திவிட்டு, எனது தந்தையின் உடல்நிலை குறித்து தகவலை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடி ரிலீஸ், ஹாட்ரிக் அடிக்கப் போகும் கீர்த்தி சுரேஷ்ஓடிடி ரிலீஸ், ஹாட்ரிக் அடிக்கப் ... 'யமுனா' சத்யாவிற்கு டும் டும் 'யமுனா' சத்யாவிற்கு டும் டும்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in