வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் | தரக்குறைவாக விமர்சித்த நெட்டிசன்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி |
கொரானோ ஊரடங்கில் ஓடிடி தளங்களில் புதிய திரைப்படங்கள் நேரடியாக வெளியாக ஆரம்பித்தன. அந்த விதத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாநாயகியாக நடித்த 'பெண்குயின்' படம் ஜுன் மாதத்தில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. ஆனால், படம் நன்றாக இல்லாத காரணத்தால் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் 'மிஸ் இந்தியா, குட்லக் சகி' ஆகிய இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களையும் ஓடிடி தளங்களில் வெளியிட உள்ளார்களாம். இதில் 'மிஸ் இந்தியா' படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 10 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
'குட்லக் சகி' படத்தை 13 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் பிரைம் வாங்கியுள்ளதாம். இப்படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள். விரைவில் இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதிகளும் அறிவிக்கப்பட உள்ளன.
ஓடிடி தளங்களில் அடுத்தடுத்து மூன்று வெளியீடுகளால் அதில் ஹாட்ரிக் அடிக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ்.