நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை | கனிமொழியுடன் லிங்குசாமி திடீர் சந்திப்பு | கேரளாவில் தியேட்டர்கள் ஸ்டிரைக் | விருதுகளை பாத்ரூம் கதவின் கைபிடியாக்குவேன் : நசுருதீன் ஷா |
கொரோனா ஊரடங்கினால் 5 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகின்றன, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, வைபவ் நடித்த லாக்கப் ஆகிய படங்கள் ஓ.டி.டி.யில் வந்தன. அடுத்து சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படத்தையும் அக்டோபர் 30-ந்தேதி இணைய தளத்தில் வெளியிடுவதாக சூர்யா அறிவித்துள்ளார்.
"காலச்சூழ்நிலையால் இந்த படத்தை அக்டோபர் 30ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்கிறேன். இந்த நேரத்தில் நடிகனாக இல்லாமல் தயாரிப்பாளராக இருந்து இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த படத்தை சார்ந்த படைப்பாளிகளின் நலனை கருதியே இந்த முடிவு என சூர்யா கூறினார்.
ஆனால் இதற்கு தியேட்டர் அதிபர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருப்பதாவது: கொரோனாவால் தியேட்டர் அதிபர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். சினிமாவும் நெருக்கடியில் உள்ளது. இதை கவனத்தில் கொள்ளாமல் தியேட்டரை நம்பி, அதையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள தொழிலாளர்களை பற்றி யோசிக்காமல் சூர்யா முடிவு எடுத்துள்ளார். தியேட்டர் தொழில் நலிவடைந்து இருக்கும்போது, இதற்கு ஆதரவாக இல்லாமல் தியேட்டர் அதிபர்களுடன் பேசாமல் அவராகவே எடுத்திருக்கும் முடிவு வருத்தம் தருகிறது.
ஜோதிகா நடிப்பில் அவர் தயாரித்த பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்தபோது, சூரரைப் போற்று படத்தை தியேட்டரில்தான் ரிலீஸ் செய்வேன் என சொல்லியிருந்தார். இப்போது அதை மீறி ஓடிடியில் ரிலீஸ் செய்யும் தவறை செய்கிறார். சூர்யா எடுத்துள்ள முடிவு தியேட்டர்களை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுத்து விடும். இது தவறான முடிவு. இதுபோல் எங்களுக்கும் தியேட்டரில் என்ன படத்தை திரையிடுவது என்று முடிவு எடுக்க உரிமை இருக்கிறது. தியேட்டர்கள் செப்டம்பரில் திறக்கப்படும் என தெரிகிறது. தியேட்டர்கள் திறந்ததும் இந்த விவகாரம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்களுடன் பேசி முடிவு எடுக்கப்படும். என்றார்.