எனக்கு மரணமும் நிகழலாம் - பாலா உருக்கம் | அடம்பிடித்த சிறுமி : வீடியோ காலில் வந்து இன்ப அதிர்ச்சி தந்த விஜய் | நீச்சல் குளத்தில் போட்டோசூட் நடத்திய ஷிவானி | தங்கலான் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த விக்ரம் | மாறிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ் - சூரி | லியோ அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும்? | போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர் | எதிர்நீச்சல் தொடரில் 10 ஆண்டுகள் கூட நடிப்பேன் : மதுமிதா மகிழ்ச்சி | தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன் | 17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி - ஜெயராஜ் |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த வழக்கை மும்பை போலீஸ் விசாரித்து வந்தது. இந்த நிலையில் அந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு குறித்த விபரங்களையும் 24 மணி நேரத்துக்குள் சிபிஐ வசம் ஒப்படைக்க. உத்தரவிட்டது. இதை பலர் வரவேற்றுள்ள நிலையில், வழக்கம்போல சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்த உத்தரவை கிண்டலடித்து விமர்சித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த உத்தரவுப்படி சிபிஐயின் 24 மணி நேர விசாரணை, மும்பை போலீசின் 68 நாட்கள் விசாரணைக்கு சமமானதாகிவிடும் என்றால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சிபிஐ இந்த வழக்கை முடித்துவிடும் என்று எடுத்துக்கொள்ளலாமா..? வாவ்.. அதாவது மும்பை போலீஸ் 68 நாட்களில் செய்ய முடியாத ஒன்றை, சிபிஐ 24 மணி நேரத்திற்குள் செய்து முடித்து விடுவார்கள்.. அப்படியானால் இதே அடிப்படையில், மும்பை போலீஸால் முடிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் இன்னும் பல வழக்குகளையும் சிபிஐ வசமே ஒப்படைக்கலாமே.. சுஷாந்த் பிரபலமானவர் என்பதால் அவருக்கு மட்டும் தான் நீதி கிடைக்க வேண்டுமா? பாதிக்கப்பட்ட மற்ற சாமானியர்களுக்கும் நீதி கிடைக்கட்டுமே” என விமர்சித்துள்ளார்.