Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அக்.,30ல் ஓடிடி தளத்தில் சூரரைப்போற்று ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

22 ஆக, 2020 - 15:23 IST
எழுத்தின் அளவு:
Soorarai-pottru-officially-releasing-in-OTT

இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து, நடித்துள்ள படம் சூரரைப்போற்று. நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்க, இவர்களுடன் மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களை அடிப்படையாக கொண்டது இப்படம். ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா பிரச்னையால் இப்படம் முடங்கி உள்ளது.

தற்போதைய சூழலில் தியேட்டர் எப்போது திறக்கப்படும் என உறுதியாக சொல்ல முடியவில்லை. இதனால் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துவிட்டனர். அக்., 30ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உலகளவில் வெளியாகிறது.

சூர்யா கூறுகையில், “இயக்குனர் சுதாவிடம் கதையை நான் கேட்ட தருணத்தில், அதை உலகத்திற்கு சொல்ல வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன், இந்த படத்தை 2D என்டர்டெயின்மென்ட்டின் கீழ் தயாரிக்கவும் விரும்பினேன். கேப்டன் கோபிநாத்தின் பாத்திரம் எனக்கு ஒரு சவாலாக இருந்தபோதிலும், இறுதியாக எங்கள் படைப்பை பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது. நாம் இதற்கு முன் சந்தித்திராத இப்போதிருக்கும் இந்த சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோவில் தங்கள் வீடுகளிலிருந்து “சூரரை போற்று”- ஐப் பார்க்க முடியும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படம் எங்கள் அன்பின் உழைப்பு, இது இப்போது உலக பார்வையாளர்களை மகிழ்விக்கப் போகிறது என்பதில் சந்தோஷமாக உணர்கிறேன் என்றார்.




இயக்குனர் சுதா கூறுகையில், “சூர்யாவை இயக்குவது ஒரு மகிழ்ச்சியான விஷயம். கேப்டன் கோபிநாத் கதாபாத்திரத்திற்கு அவர் தான் எனது முதல் மற்றும் கடைசி தேர்வாக இருந்தார். அமேசான் பிரைம் வீடியோவில் படத்தை பிரீமியர் செய்வது ஒரு புதிய அனுபவம் மற்றும் அதை ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உலகெங்கிலும், பல்வேறு வகையான மக்கள் இந்தப் படத்தைப் பார்க்கப் போகிறார்கள் என்பது ஒரு படைப்பாளருக்கு உற்சாகமாமான விஷயம் தான்” என்றார்.

கொரோனா ஊரடங்கு வந்ததால் தியேட்டர்கள் மூடப்பட்ட போது முதன்முதலாக தமிழில் சூர்யா தயாரிப்பில் அவரது மனைவி ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் இதே ஓடிடி தளத்தில் வெளிவந்தது. இதற்கு தியேட்டர்கள் உரிமையாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவரது படங்களையும், அவர் சார்ந்தவர்களின் படங்களையும் வெளியிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் பகிரங்கமாக அறிவித்தனர். ஆனால் ஒரு தயாரிப்பாளராக சூர்யா தன் முடிவை மாற்றவில்லை. படத்தையும் வெளியிட்டார். அதை தொடர்ந்து தமிழில் பெண்குயின், டேனி, லாக்கப் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின. பிற மொழிகளிலும் ஏராளமான படங்கள் வெளிவந்தன. இப்போது பெரிய படமான சூர்யாவின் சூரரைப்போற்று படமும் ஓடிடியில் வெளியிட தயாராகிவிட்டது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படம் 'பூமிகா'ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படம் ... ரூ.5 கோடி நிதி உதவி : ஓடிடியில் சூரரைப்போற்று ஏன்? - சூர்யா விளக்கம் ரூ.5 கோடி நிதி உதவி : ஓடிடியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Ram - Thanjavur,இந்தியா
22 ஆக, 2020 - 23:18 Report Abuse
Ram மாஸ்டர் - கோவிச்சிக்க போறாரு ... நமக்கு முன்னாடி தம்பி படம் OTT yil release அகுதேன்னு
Rate this:
sundarsvpr - chennai,இந்தியா
22 ஆக, 2020 - 21:26 Report Abuse
sundarsvpr சினிமா துறை காணாமல் போவதால் ஏழை மக்கள் சேமிப்பு கூடும். இந்த நிலை சாராய கடைகளுக்கு ஏற்பட்டால் இரட்டை மகிழ்ச்சி.
Rate this:
22 ஆக, 2020 - 16:57 Report Abuse
ilaiyaraja muthu சூரர் ஓடி ஓடி ஓடி(டி) க்கு வந்துட்டாரே....... தமிழ் சினிமாவுக்கு சீக்கிரம் சங்கு ஊதுங்கடா.... எங்க பிள்ளை குட்டிகளாவது நல்லா இருக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in