Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேரள விமான விபத்து சம்பவம் சினிமாவாகிறது

21 ஆக, 2020 - 12:35 IST
எழுத்தின் அளவு:
Khozhikode-flight-accident-to-be-a-movie

சமீபத்தில் கேரள மாநிலம் கோழிகோடு வந்த ஏர் இந்தியா விமானம், தரையிறங்கும்போது விபத்துக்கு உள்ளானது. ரன்வேயில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் தடுப்பு சுவரில் மோதி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து இரண்டாக பிளந்தது. மிகப்பெரிய இந்த விபத்தில் 16 பயணிகளும் 2 விமானிகளும் உயிர் இழந்தனர்.

இந்த விபத்து சம்பவத்தை மையமாக வைத்து கேரளாவில் காழிகட் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இதனை மாயா இயக்குகிறார். மஞ்சீத் மரன்சேரி கதை, திரைக்கதை எழுதுகிறார். டேக் ஆப் சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

படம் பற்றி இயக்குனர் மாயா கூறியதாவது: இவ்வளவு பெரிய விபத்தில் குறைவானவர்களே மரணம் அடைந்தற்கு காரணம் மக்களின் மீட்பு பணி. கொரோனா காலத்தையும் கவனத்தில் கொள்ளாமல் அவர்கள் தங்கள் சொந்த வாகனங்களில், சொந்த பணத்தை செலவு செய்து பயணிகளை மீட்டு தங்கள் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். இதை மையமாக கொண்டு இந்த படம் தயாராகிறது. விமான விபத்து காட்சி உயர்தர கிராபிக்சில் உருவாக்கப்படுகிறது. முக்கியமான நடிகர்கள் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளோம். என்றார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
முழுநேர விவசாயி ஆனார் கிஷோர்முழுநேர விவசாயி ஆனார் கிஷோர் செப்டம்பரில் அந்தாதூன் ரீமேக் படப்பிடிப்பு செப்டம்பரில் அந்தாதூன் ரீமேக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Sanny - sydney,ஆஸ்திரேலியா
22 ஆக, 2020 - 10:34 Report Abuse
Sanny இந்த படத்தின் வருமானத்தை பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் குடும்பத்துக்கு கொடுப்பார்களா?
Rate this:
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
22 ஆக, 2020 - 10:14 Report Abuse
Parthasarathy Badrinarayanan பிணங்களை வைத்துக் காசாக்குவதில் கைதேர்ந்த தமிழ்த் திரையுலகைப் பார்த்து கேரளாவும் கெடுகிறது.
Rate this:
duruvasar - indraprastham,இந்தியா
22 ஆக, 2020 - 07:44 Report Abuse
duruvasar டூயட் காட்சிகள் துபாயில் எடுக்கறாங்களாம்.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22 ஆக, 2020 - 04:45 Report Abuse
Mani . V பணம் தின்னும் பேய்கள். மக்களின் சாவை கூட வைத்து சினிமா எடுத்து பணம் சம்பாதிக்க நினைக்கும் இவர்களை எந்த ரகத்தில் சேர்ப்பது?
Rate this:
சுதா, பட்டுக்கோட்டை நீங்க சொல்றது சரி....
Rate this:
ThiaguK - Madurai,இந்தியா
21 ஆக, 2020 - 12:52 Report Abuse
ThiaguK அந்த படத்தின் லாபத்தின் ஒருபகுதியை பய் லட்டினார் குடும்பத்துக்கு வழங்கலாமே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in