சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
பிரகாஷ்ராஜ் போன்றே விவசாயத்தில் ஆர்வம் மிக்க நடிகர் கிஷோர். பெங்களூரில் வசிக்கும் அவருக்கு பெங்களுரில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பன்னெர்கட்ட உயிரியல் பூங்கா அருகில் பண்ணை நிலம் உள்ளது. அங்கு அவர் தீவிரமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலம் முழுவதும் குடும்பத்துடன் அங்கேயே தங்கி இருந்து விவசாயம் செய்து வருகிறார். குழந்தைகள் அங்கிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் மூலம் படிப்பை தொடர்கிறார்கள்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் கொரோனா ஊரடங்கு காலத்தை முழு நீள விவசாயத்திற்காக அர்ப்பணித்தேன். பட்டாணி, நெல் மற்றும் ராகி போன்றவற்றை பயிர் செய்தேன். சமீபத்தில் ஒரு சில காய்கறிகளையும் வளர்க்கத் தொடங்கினோம். இப்போது ஊரடங்கு தளர்வு இருப்பதால் அவ்வப்போது பெங்களூர் சென்று வருகிறேன். நான் அடிப்படையில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் அதனால் எனக்கு விவசாய ஆர்வம் இருப்பது ஒன்றும் ஆச்சர்யமல்ல. என் குழுந்தைகளும் இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே விவசாயம் செய்கிறேன். என்கிறார் கிஷோர்.