Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராதிகா சரத்குமார் பிறந்த நாள்: தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி

21 ஆக, 2020 - 12:26 IST
எழுத்தின் அளவு:
Happy-birthday-to-Actress-Raadhika

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத பெண் ஆளுமை ராதிகா சரத்குமார். அவருக்கு இன்று 57வது பிறந்த நாள். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சினிமாவில் தனது 42வது ஆண்டை நிறைவு செய்தார். அவரைப் பற்றிய 10 சுவாரஸ்மான தகவல்கள்.

1.கிழக்கே போகும் ரெயில் படத்திற்காக மாநிறமும், கிராமத்து தோற்றமும், சுறுசுறுப்பும் நிறைந்த ஒரு பெண்ணை தேடிக் கொண்டிருந்தார் பாரதிராஜா. அப்போதுதான் ராதிகா லண்டனில் படித்து திரும்பி இருந்தார். ஜீன்ஸ் பேண்டும், டீசர்ட்டும், கிராப் தலையும் என நவநாகரீக தோற்றத்துடன் இருந்த ராதிகாவின் முகத்தில் அந்த கிராமத்து மணத்தை கண்டுபிடித்தார். கிழக்கே போகும் ரெயிலில் ஹீரோயின் ஆக்கினார். கிழக்கே போகும் ரயில் படம் கடந்த 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியானது.

2. தமிழ் சினிமாவில் துணிச்சலான நடிகை ராதிகா. யாரையும் அந்த இடத்திலேயே எதிர்த்து பேசி விடுவார். தன் கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் வெளியிடுவார்.

3. ராதிகாவின் அரசியல் கொஞ்சம் வித்தியாசமானது. அவர் தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்ப நண்பர். தி.மு.வை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவரது கணவர் சரத்குமார் தனிகட்சி ஆரம்பித்தபோது தி.மு.கவை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். ஆனாலும் குடும்ப நண்பராக தொடர்கிறார்.

4. ராதிகாவின் தனிப்பட்ட வாழ்க்கை வெளிப்படையானது. அவருக்கு வந்த காதல்கள், அவரது திருமணங்கள், பிரிவுகள் அனைத்தையும் வெளிப்படையாவே வைத்திருப்பவர்.

5. தொலைக்காட்சி தொடர்கள் அறிமுகமானபோது அதிலும் கால்பதித்து சாதனை படைத்தார். தொடர் தயாரிப்புக்கென்றே தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய முதல் நடிகை அவர் தான்.

6. பொருளாதாரத்தில் பெரிய எழுச்சியையும், பெரிய வீழ்ச்சியையும் சந்தித்தவர். ஆனால் இரண்டிலும் அவர் ஒரே மாதிரியாக இருந்தார். கைவசம் நடிப்பு தொழில் இருக்கு எவ்வளவு இழந்தாலும் சம்பாதிக்க முடியும் என்பார்.

7. குடும்ப விஷயத்தில் மிகவும் பாசக்காரார். தன் வெளிநாட்டு கணவருக்கு பிறந்த மகளானாலும் சரி, சரத்குமாருக்கு பிறந்த மகன் ஆனாலும் சரி, சரத்குமாரின் மகள்கள் ஆனாலும் சரி எல்லோரையும் ஒரே மாதிரியாக அன்புடன் பார்க்கிறவர்.

8. ராதிகாவுக்கு இரண்டு கனவுகள் உண்டு. அவரது தந்தை எம்.ஆர்.ராதாவின் ரத்தகண்ணீர் நாடகத்தில், எம்.ஆர்.ராதா நடித்த கேரக்டரை பெண் கேரக்டராக மாற்றி அரங்கேற்ற வேண்டும். அதில் தான் நடிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அதேபோல எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் என்கிற கனவும் உண்டு.

9. தென்னிந்திய மொழிகளில் அதிக படங்களில் நடித்த நடிகை ராதிகா. மீண்டும் ஒரு காதல் கதை படத்திற்காக(தயாரிப்பாளராக) தேசிய விருது பெற்றார். சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருதை 3 முறையும், கேரள அரசு விருதை ஒரு முறையும் பெற்றுள்ளார்.

10. நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர், நிர்வாகி, பின்னணி குரல் கலைஞர், பேச்சாளர், அரசியல்வாதி என சகலகலாவல்லியாக வாழ்க்கையை தொடர்கிறார் ராதிகா.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இந்த தேசத்தின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: சிரஞ்சீவி உருக்கம்இந்த தேசத்தின் குரல் மீண்டும் ... முழுநேர விவசாயி ஆனார் கிஷோர் முழுநேர விவசாயி ஆனார் கிஷோர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Siva Subramaniam - Coimbatore,இந்தியா
26 ஆக, 2020 - 16:55 Report Abuse
Siva Subramaniam Best wishes to Shri.Sarathkumar for many returns of his birthday and best of Wishes to Ms.Radhika.
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
22 ஆக, 2020 - 06:13 Report Abuse
Fastrack கிழக்கே போகும் ரெயிலில் நடிக்கும்போது பதினாலு வயசு தானா ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in