விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்திற்கு ‛லியோ' டைட்டில்: அக்.,19ல் ரிலீஸ் | ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆப் கோதா' | ஒரே நேரத்தில் இரண்டு மெகா இயக்குனர்களின் படங்களில் நடிக்கப் போகும் சூர்யா! | திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா! | விஜய் 67 படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் சஞ்சய் தத்! | சாகுந்தலம் படத்திற்காக 30 கிலோ எடை கொண்ட புடவை அணிந்து நடித்த சமந்தா! | சினிமாவை விட்டு விலகினாரா பாண்டிராஜ்?: விவசாயத்தில் தீவிரம் | நானாக பட்டம் போட்டுக் கொள்ள மாட்டேன்: ஆர்ஜே.பாலாஜி | தமிழில் உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் படம் | காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா வழிபாடு |
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:
லட்சக்கணக்கானவர்களால் விரும்பப்படும் ஒரு பாடகர். அவர் இந்த தேசத்தின் பெருமை. எனது நண்பரும் சகோதரருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைவதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறார். மேலும் சிகிச்சைக்கு நன்கு பதிலளிப்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வீடியோ மூலம் எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்.
பாலுவுடனான எனது உறவு சினிமாவுக்கு அப்பாற்பட்டது. நாங்கள் நெருங்கிய குடும்ப நண்பர்கள். சென்னையில், நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக வாழ்ந்தோம், நாங்கள் அடிக்கடி சந்திப்போம். நான் அவரை என் சகோதரனாகவும், அவரது சகோதரிகள் என்னை தங்கள் சகோதரராக நேசித்தார்கள். இந்த தேசத்தின் குரலான எஸ்பிபி, விரைவில் குணமடைய வேண்டும், மீண்டும் தனது குரலால் அனைவரையும் மயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி உள்ளார்.