ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! | முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கும் தேவா! | விரைவில் சந்திக்கிறேன்- அடுத்த படத்தை அறிவிக்க போகிறாரா லெஜண்ட் சரவணன்? | தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்! | அஜய் தேவ்கனை சந்தித்த குஷ்பூ | ஜானி மாஸ்டருக்கு நன்றி சொன்ன ஜாக்குலின் பெர்னாண்டஸ் | போர்க்கப்பலை பார்வையிட்ட மோகன்லால் ; அதிகாரிகள் உற்சாக வரவேற்பு | அது என்னுடைய கார் அல்ல ; ஷாஜி கைலாஷ் விளக்கம் | 6 வருடமாக டார்ச்சர் கொடுத்த விமர்சகர் ; நித்யா மேனன் அதிர்ச்சி தகவல் |
சமூக வலைத்தளங்களில் பொதுவாக அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையே தான் சண்டைகள் நடக்கும். இந்த கொரானோ ஊரடங்கில் டிவிக்களில் அஜித், விஜய் படங்கள் ஒளிபரப்பாகும் போது யாருடைய படம் அதிக ரேட்டிங் வாங்கியது என்பது குறித்து இருவரது ரசிகர்களும் சண்டையிட்டுக் கொள்வார்கள்.
ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் டிவிக்களில் ஒளிபரப்பான படங்களில் ராகவா லாரன்ஸ் நடித்த 'காஞ்சனா 3' படம் 1 கோடியே 28 லட்சம் தடப்பதிவுகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. விஜய் நடித்த 'கில்லி' படம் 94 லட்சம் தடப்பதிவுகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
'காஞ்சனா' சீரிஸ் படங்கள் எத்தனை முறை ஒளிரப்பானாலும் அவை ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படுகிறது என 'காஞ்சனா' பட ரசிகர்கள் 'கில்லி'யைப் பற்றி கிண்டலாகப் பேசினார்கள். 'காஞ்சனா' படத்தைக் கொண்டாடி பதிவு போட்டது அஜித் ரசிகர்களாகக் கூட இருக்கலாம்.
அதனால், விஜய் ரசிகர்கள் 'கில்லி' படம் வெளிவந்து 16 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த அளவிற்கு ரேட்டிங்கை வாங்குவது பெருமையான விஷயம்தான். இந்த ஊரடங்கில் இதற்கு முன் மார்ச் மாதம் ஒரு முறை ஒளிபரப்பான போது கூட 1 கோடியே 34 லட்சம் தடப்பதிவுகளைப் பெற்றது என குறிப்பிட்டு வருகிறார்கள்.