யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் | குட்டையான உடை அணிந்து குத்தாட்டம் போட்ட ஸ்ரீநீதி! | 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் அசத்திய தமிழ் திரைப்படம் |
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74) கொரோனா தொற்றுக்குள்ளாகி, சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு, உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் உறுப்புகள் சீராக இயங்குவதாகவும், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த, உயிர் காக்கும் உபகரணங்கள் வழியாக, ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
எஸ்.பி.பி., நல்லபடியாக நோயில் இருந்து குணமாகி மீண்டு வர வேண்டும் என திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் கடவுளிடம் வேண்டுகின்றனர். இந்நிலையில் எம்.ஜி.ஆர்., போன்று எஸ்.பி.பி.க்கும் கூட்டு பிரார்த்தனை செய்ய வாங்க என ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பாரதிராஜா.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : இந்திய திரை உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தன் இனிமையான குரலால் மக்களை மகிழ்வித்தும், மொழிகளை வளமைப்படுத்திக் கொண்டும் ஒரு குயில் மூச்சுவிடாமல் இன்றும் நம்மைத் தாலாட்டிக் கொண்டு இருக்கிறது என்றால் அது பாடும் நிலா எஸ்.பி.பி தான். தற்போது அவன் கொரோனா தாக்குதலுக்கு ஆட்பட்டு முடக்கப்பட்டுள்ளான் என்று நினைக்கும்போது கண்ணீர் மல்கிறது. அவன் நிலையைக் கண்டு திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், அனைத்து துறைக் கலைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் வேதனை அடைவதை பார்த்து நெஞ்சம் பதறுகிறது. அன்பை மட்டுமே விதைக்கத் தெரிந்தவன், பண்பாளன், மாபெரும் கலைஞன். அந்த கலைஞன் மீண்டு வரவேண்டும். நாம் மீட்டு வர வேண்டும்.
அதற்காக இயற்கை அன்னையை பிரார்த்திக்கும் வகையில் இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனைத்து திரைப்பட நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள், பெப்சி அமைப்பினர், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஊடக கலைஞர்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் இன்று(ஆக.,20) இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டுப் பிரார்த்தனைக்கு உலகமெங்கும் வாழும் மக்களை அன்புடன் அழைக்கிறேன்.
எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த போது, இந்த மாதிரி ஒரு கூட்டுப் பிரார்த்தனை செய்தோம். அவர் அதிலிருந்து மீண்டு தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தார். அதே போல் இந்தக் கூட்டுப் பிரார்த்தனை மூலம் எஸ்.பி.பியை மீட்டெடுப்போம் வாருங்கள். இனம், மொழி, மதம் கடந்து ஒரு மகா கலைஞனை மீட்டெடுப்போம். அவன் குரல் காற்றில் மீண்டும் ஒலிக்க வேண்டும். ஒன்று கூடுவோம். பிரார்த்திப்போம். வாரீர்.
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
40 ஆயிரம் பாடல்களை பாடி, நாலா திசையிலும் மக்களை மகிழ்வித்த நீ, இன்னும் நான்கு லட்சம் பாடல்கள் உன் உதடுகளில் உதிர்க்க ஏங்கி தவிக்கும் கோடான கோடி ரசிகர்களின் பிரார்த்தனை நிறைவேறி நலம் பெற்று வருவாய் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் நல் உள்ளங்கள்.
நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள்....!!
நிலவே முகம் காட்டு என்னை பார்த்து ஒளி வீசு...!!
உன்னால் முடியும் தம்பி தம்பி...!!