மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
கருணைக்கொலையை பின்னணியாக வைத்து உருவாகும் ஆந்தாலாஜி வகை படத்தில் கவுதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய நால்வரும் ஆளுக்கொரு குறும்படங்களை இயக்குகின்றனர். இதில் சுதா கொங்கரா இயக்கவுள்ள குறும்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்த குறும்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதிக்கு அடுத்து மிக துணிச்சலாக, இந்த இளம் வயதிலேயே காளிதாஸ் இந்த கேரக்டரில் நடிப்பது ஆச்சர்யமான விஷயம் தான். ஒருபக்க கதை, மீன்குழம்பும் மண்பானையும் படத்திற்கு காளிதாஸ் நடிக்கும் மூன்றாவது தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.