Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதல் படம் 'ராட்சசன்' - நிஜமாகவா ?

17 ஆக, 2020 - 16:40 IST
எழுத்தின் அளவு:
Ratsasan-top-in-tamil-movies

உலக அளவில் திரைப்படத்த தகவல்கள் சார்ந்த இணையதளங்களில் தனி இடத்தைப் பிடித்திருக்கும் தளம் ஐஎம்டிபி. இந்த இணையதளத்தில் ஒவ்வொரு திரைப்படங்களுக்கும் ரேட்டிங் வழங்கப்படுவது வழக்கம். அந்த ரேட்டிங்கை வைத்துதான் ஓடிடி தளங்கள் அந்தப் படங்களையும் கூடுதலாக விளம்பரத்தில் சேர்த்துக் கொள்வார்கள்.

தரத்தின் அடிப்படையில் அந்த ரேட்டிங் ஏறக்குறைய ரசிகர்களின் கருத்துப்படியும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை தற்போது வரை இருந்து வருகிறது. அந்த இணையதளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற தமிழ்ப் படங்கள் என்ற ஒரு தரவும் உண்டு. அதில் விஷ்ணு விஷால் நடித்து 2018ல் வெளிவந்த 'ராட்சசன்' படம் தற்போது 8.5 ரேட்டிங் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் தகவலை அப்படக்குழுவினர் பெருமையாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

அதே சமயம், “நாயகன், அன்பே சிவம், தேவர்மகன்,' உள்ளிட்ட படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி 'ராட்சசன்' படம் முதலிடத்திப் பிடித்திருக்கிறது என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. அந்தப் படங்களை விடவும் 'ராட்சசன்' மிகச் சிறந்த படம் இல்லை என்பது ரசிகர்களின் கருத்து.

'விக்ரம் வேதா' படம் 8.5 ரேட்டிங்குடன் இரண்டாவது இடத்திலும், 'நாயகன்' படமும் 8.5 ரேட்டிங்குடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 8.4 ரேட்டிங்கைப் பெற்று, 'அன்பே சிவம், பரியேறும் பெருமாள், தேவர் மகன், 96' ஆகிய படங்கள் முறையே 4, 5, 6, 7வது இடங்களைப் பிடித்துள்ளன.

இந்தச் செய்தி அதிகமாகப் பகிரப்படும் போது போட்டியில் இருக்கும் மற்ற படங்களின் ரசிகர்கள் உடனடியாக அவர்களது வாக்குகளைச் செலுத்தி சீக்கிரத்திலேயே இந்த ரேட்டிங்கில் மாற்றங்களைக் கொண்டு வந்துவிடுவார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மம்முட்டியா இது, ஆச்சரியத்தில் ரசிகர்கள்மம்முட்டியா இது, ஆச்சரியத்தில் ... சமூகவலைத்தள பதிவுகளை 'டெலிட்' செய்த த்ரிஷா சமூகவலைத்தள பதிவுகளை 'டெலிட்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in