விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் |
கொரானோ ஊரடங்கில் புதிதாக இணையதளம் மூலமாக படத்தை வெளியிடும் முறையை ஆரம்பித்து வைத்தார் ராம்கோபால் வர்மா. ஆனால், ஒவ்வொன்றும் ஆபாசத்தை மையமாகக் கொண்ட படங்களாக அமைந்ததுதான் அதிர்ச்சியானது. 'பவர் ஸ்டார்' படம் மட்டும் அதற்கு விதிவிலக்கு. மற்றபடி 'கிளைமாக்ஸ், நேக்டு,' என இரண்டு ஆபாசப் படங்களை வெளியிட்டதன் வரிசையில் நேற்று 'த்ரில்லர்' என்றொரு படத்தை வெளியிட்டார்.
இந்த 'த்ரில்லர்' படம் வெறும் 24 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு ஆபாசப் படம்தான். இப்படத்தைப் பார்க்க 200 ரூபாய் கட்டணம் வசூலித்தார் வர்மா. பரபரப்பை ஏற்படுத்துவதற்காக பட வெளியீட்டிற்கு முன்பாக படத்தின் நாயகி அப்சரா ராணியின் ஆபாசப் படங்கள் சிலவற்றை படத்தின் போஸ்டராக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். ஆனால், படத்தில் அப்படியான காட்சிகள் எதுவும் இல்லையாம். ஓரிரு ஆபாசக் காட்சிகளை மட்டுமே வைத்து தங்களை ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
“24 நிமிடப் படத்திற்கு 200 ரூபாயெல்லாம் ரொம்ப ஓவர். ஒரு காலத்தில் தன் படங்களால் இந்திய அளவில் பேசப்பட்டவர் 'இச்சை' விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படியாகிவிட்டாரரே” என்கிறார்கள் ரசிகர்கள்.
அடுத்து '12 ஓ கிளாக்' என்ற படத்தை இதே போன்று இணையதளத்தில் வெளியிட உள்ளார் ராம்கோபால் வர்மா.