சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன். நடிகர் தனுஷின் அண்ணனான இவர், அடுத்ததாக புதுப்பேட்டை அல்லது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் நடிகராக களமிறங்கியுள்ளார் செல்வராகவன். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
சாணிக் காயிதம் படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. அருண் மாதேஸ்வரன் ஏற்கனவே ராக்கி என்ற படத்தை இயக்கியுள்ளார். ராக்கி படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அந்த படம் வெளியாகும் முன்பே அருண் மாதேஸ்வரனின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.