Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் வில்லன் நடிகர்

15 ஆக, 2020 - 18:52 IST
எழுத்தின் அளவு:
Actor-Suryakanth-needs-help

கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து படப்பிடிப்புகள் ரத்து செய்யப் பட்டிருப்பதால் துணை நடிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகள் வேலையில்லாமல் இருக்கும் துணை நடிகர்கள் மற்றும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தனர். ஆனாலும் அவை இத்தனை மாதங்களுக்கு போதுமானவையாக இல்லை என்று தான் கூற வேண்டும். இதனால் பலரும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.

அவர்களில் வில்லன் நடிகர் சூரியகாந்தும் ஒருவர். பாக்யராஜின் 'தூரல் நின்னு போச்சு' படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் இவர். பாரதிராஜாவின் மண்வாசனை, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட ஏராளமான படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். கடைசியாக கார்த்தியுடன் கைதி, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது திரைப்பட படப்பிடிப்புகள் இல்லாததால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளாராம் சூர்யகாந்த். கூடவே சர்க்கரை நோய் பாதிப்பு போன்ற உடல் பாதிப்புகளும் இருப்பதால் மாதந்தோறும் மருந்து வாங்கவே ரூ. 1500 கூட பணம் கிடைப்பதில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

சாப்பாட்டுக்க வழியில்லாமல் தவிப்பதாகவும், தயவு செய்து தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
சுதந்திரத்தை கேட்டு பெற வேண்டி உள்ளது : நிவேதா பெத்துராஜ்சுதந்திரத்தை கேட்டு பெற வேண்டி ... சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது அல்ல, எடுக்கப்படுவது : ஓவியா சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

17 ஆக, 2020 - 12:28 Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) இளமையில் சேமிப்பு மிக அவசியம். காசு எப்போதும் வந்து கொண்டு இருக்காது
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
17 ஆக, 2020 - 11:35 Report Abuse
RaajaRaja Cholan சினிமாவில் மூன்று காந்த் தான் வெற்றி பெற்றுள்ளனர் , ஸ்ரீகாந்த் , விஜய காந்த் , ரஜினிகாந்த் , மற்றவங்க கார்பன் கோப்பி ஒரிஜினல் இல்லை , மு க முத்துவும் எம் ஜி ஆர் போல அசல் அசல் தான் . நகல் வாய்ப்பை பயன்படுத்தி கிடைத்தது சேமித்து வைத்திருந்தால் கஷ்டப்பட வேண்டியிருக்காது தப்பித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் . வேறு தொழில் பார்த்து இருக்கலாம் . இது எல்லாம் வெளியில் இருந்து சொல்லும் கருத்துக்கள் , அவைகளுடைய உண்மையான கஷ்டம் கூட இருந்தால் தான் தெரியும்
Rate this:
LAX - Trichy,இந்தியா
17 ஆக, 2020 - 00:31 Report Abuse
LAX Well said Mr.murugavel..
Rate this:
LAX - Trichy,இந்தியா
17 ஆக, 2020 - 00:31 Report Abuse
LAX இந்தத் துறையில் இருந்துகொண்டு, வாங்கும் காசுக்கு மேல், திரையில் ஓவரா கர்ஜிக்கும், மைக் கும் மேடையும் கிடைத்தால் தேவையில்லாம இந்து கோவில்களைப் பற்றி விமர்சனம் செய்துகொண்டும், அரசியல்வாதிகளுக்கெதிராக சவடால் பேசிக்கொண்டும் திரியும் 'அ'யோக்கியர்கள் கண்களில் இதெல்லாம் படாதே.. அவர்களின் காதுகளுக்கு இந்தச் செய்திகள் எட்டாதே..
Rate this:
Mobin - chennai,இந்தியா
16 ஆக, 2020 - 12:18 Report Abuse
Mobin Please இவரது வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்கவும்.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in