பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் அவ்வப்போது டிவிட்டரில் பதிவுகளை வெளியிடுவது வழக்கம். ஆனால் அவரது பல டிவீட்களில் கவிதை நடை வரிகள் சாமானியர்களுக்கு எளிதில் புரிந்து விடுவதில்லை. இதனை பலர் தங்களது கமெண்ட்களில் குறிப்பிடுவது வழக்கம்.
தற்போது அதேபோல் அமலாபாலிடமும் அவரது பாலோயர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர். சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர்களில் அமலாபாலும் ஒருவர். அதுவும் வஞ்சனை இல்லாமல் அவர் வெளியிடும் கவர்ச்சிப் படங்களைப் பார்ப்பதற்காகவே அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
லுங்கி கட்டுவது, தம் அடிப்பது, பார்ட்டியில் ஆடுவது என அமலாபால் வெளியிடும் பதிவுகள் சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. ஆனால் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் அமலாபால் ஏதாவது பதிவுகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்.
அந்தவகையில் தற்போது அவர் புகைபிடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் வட்டமாக புகையை வெளியிட்டுள்ளார் அவர். கூடவே,
“எல்லா நற்பண்புகளும் வெள்ளைக் கழுவப்பட்ட துணி போல இல்லை,
எல்லா தீமைகளும் ஒரு ஹேங்கொவரை மறுபரிசீலனை செய்யாது,
அனைத்து புரட்சிகளும் சுவர்களைக் கிழிக்காது,
எல்லா புனிதர்களுக்கும் ஒளிவட்டம் இல்லை,
அனைத்து பாவிகளுக்கும் கைகளில் ரத்தம் இல்லை.
அதிர்வுகளைக் கேளுங்கள், விந்தைகளைப் பார்க்க வேண்டாம்” என சில தத்துவ வரிகளை ஆங்கிலத்தில் அவர் பகிர்ந்துள்ளார். கூடவே அமைதியான புரட்சி ( #Peacefullrevolution) என்ற ஹேஷ்டேக்கையும் அவர் இணைத்துள்ளார்.
அமலாபாலின் இந்தப் பதிவைப் பார்த்து அவரது பாலோயர்கள் குழம்பிப் போய் உள்ளனர். உங்களது ஆங்கிலமே எங்களுக்குப் புரியவில்லை. ஏன் இப்படி புரியாதபடி பதிவுகளைப் போடுகிறீர்கள். ஆனால் நிச்சயம் இந்த புகைப்பிடிக்கும் புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கப் போகிறீர்கள் என அவர்கள் கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர்.