Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பாவின் உடல்நிலை குறித்து எஸ்.பி.பி.சரண் விளக்கம்

14 ஆக, 2020 - 23:18 IST
எழுத்தின் அளவு:
SPB-Saran-clarify-about-his-fathers-health-condition

அப்பாவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டாலும் அவர் நலமாக உள்ளார் என எஸ்.பி.பி.யின் மகன் சரண் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட இந்தியாவில் பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பாடும் நிலா, பாடும் வானம்பாடி என அழைக்கப்படும் இவர் கொரோனா நோய் தொற்றால் கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை சீராக இருந்த நிலையில் நேற்று இரவு முதல் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அவர் குணமாக வேண்டி லட்சக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க அவரைப் பற்றி தவறான செய்திகளும் சமூகவலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து எஸ்.பி.பி.யின் மகன் சரண் கூறுகையில், ''அப்பா எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பது உண்மை தான், ஆனால் அவரது உடல் சீராக உள்ளது. விரைவில் அவர் குணமாகி வருவார் என நாங்கள் அனைவரும் நம்புகிறோம். உங்களின் அன்பு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி. அப்பாவின் உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில் வரும் வதந்திகளை தயவு செய்து நம்ப வேண்டாம். நாங்களே அவரின் உடல்நிலை குறித்து தெரிவிப்போம்'' என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாஞ்சாலிக்கு எல்லை இல்லை!பாஞ்சாலிக்கு எல்லை இல்லை! ஆழம் பார்க்கும் சேரன்! ஆழம் பார்க்கும் சேரன்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in