தமிழில் வெளியாகும் கன்னட படம் | பிஸியான கோமல் சர்மா | ஹன்சிகாவின் 50 வது பட வெளியீட்டு தேதி அறிவிப்பு : இதுவாவது நடக்குமா? | பில்கேட்சை சந்தித்த மகேஷ்பாபு | இந்தியாவின் மிஸ்டர்.கிளீன் : சினிமா ஆகிறது வாஜ்பாய் வாழ்க்கை | பாலிவுட்டில் அறிமுகமாகும் மதுமிதா, அர்ஜூன்தாஸ் | அம்மன் தொடருக்கு விரைவில் எண்ட் கார்டு? | ஆர்ஜே ஆனந்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள் | மருத்துவமனையில் பாண்டியன் ஸ்டோர் ஹேமா - என்ன ஆச்சு? | ரசிகர்களுக்காக முடிவை மாற்றிய சிபு சூரியன் |
நடிகர் நிதின் சத்யா ஜருகண்டி என்ற படத்தை தயாரித்தார். தற்போது தனது இரண்டாவது படமாக லாக்கப் படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் மோகன்ராஜாவின் உதவியாளர் சார்லஸ் இயக்கி உள்ளார். வெங்கட்பிரபு, வைபவ், வாணி போஜன், பூர்ணா, ஈஸ்வரி ராவ், மைம்கோபி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அரோல் கொரேலி இசையமைத்துள்ளார், சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் ஓடிடி தளத்தில் வெளியாவது குறித்து நிதின் சத்யா கூறியதாவது: எல்லா கலைஞர்களுக்குமே தங்கள் படம் பெரிய திரையில் வெளியாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். அந்த அனுபவமே தனி. ஆனால் அதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. என்னை போன்றவர்கள் கஷ்டப்பட்டு, கடன் வாங்கி படத்தை எடுத்து வைத்து விட்டு காத்திருக்கவும் முடியாது. படத்தின் கண்டன்ட் நன்றாக இருந்தால் ஓடிடி தளத்திலும் படம் வசூலை கொட்டும் என்பது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்கிறேன்.
போலீஸ் லாக்கப்பில் நடக்கும் ஒரு சம்பவம் எந்த மாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் படம். இதை இன்வெஸ்டிகேஷன் மர்டர் மிஸ்ட்ரி படம் என்று சொல்லலாம். முதன் முதலாக வெங்கட்பிரபு ரொம்ப சீரியசான இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கிறார். அடுத்த காட்சி எப்படி இருக்கும், அடுத்து என்ன நடக்கும் என்பதை யாராலும் யூகிக்க முடியாத அளவிற்க்கு படத்தை உருவாக்கி உள்ளோம். என்றார்.