Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலித்த போது அஜித்தும், ஷாலினியும் பயன்படுத்திய ரகசிய கோட் என்ன தெரியுமா?

13 ஆக, 2020 - 16:58 IST
எழுத்தின் அளவு:
Ajith---Shalini-love-story

அமர்க்களம் படத்தில் சேர்ந்து நடித்த போது காதலில் விழுந்தனர் அஜித்தும், ஷாலினியும். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த நட்சத்திர ஜோடிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்தி விட்டார் ஷாலினி.

அஜித் - ஷாலினி காதல் கதை எப்போதுமே ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான ஒன்று தான். அஜித்தைக் காதலித்துக் கொண்டிருந்த போது தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நாயகியாக நடித்து வந்தார் ஷாலினி. எனவே அங்கு படப்பிடிப்பில் இருக்கும் போது அஜித்தும், ஷாலினியும் பேசிக் கொள்ள ரகசிய வார்த்தை ஒன்றை பயன்படுத்தினராம்.

மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனுக்கு மட்டுமே அஜித் -ஷாலினி காதல் விவகாரம் தெரியுமாம். எனவே, படப்பிடிப்பின் போது மற்றவர்களின் சந்தேகத்தைத் தவிர்க்க, மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் போனுக்குத் தான் அஜித் அழைப்பாராம்.

ஷாலினியின் பெற்றோர் கவனத்தைத் தவிர்ப்பதற்காக, அஜித்தின் அழைப்பு வரும்போதெல்லாம், குஞ்சாக்கோ, 'சோனா, ஏ.கே .47 காலிங்' என மறைமுகமாக சொல்வாராம். அந்தப் படத்தில் ஷாலினியின் கதாபாத்திரத்தின் பெயர் சோனா என்பதால் அப்படி அழைப்பாராம். உடனே யாருக்கும் தெரியாமல் ஷாலினி தனியாகச் சென்று அஜித்திடம் பேசிவிட்டு வருவாராம்.

ஆனால் சிறிது நாட்களிலேயே அப்படத்தின் இயக்குநர் கமலுக்கு ஏகே 47 என்ற குறியீடு வார்த்தை மீது சந்தேகம் வந்து விட்டதாம். அவர் குஞ்சாக்கோவிடம் இது குறித்து கேட்க, ஷாலினி வெட்கத்தோடு தன் காதல் விவகாரம் பற்றி அவரிடம் கூறினாராம். இதனால் அடுத்து வந்த நாட்களில், 'ஏகே 47 போன் செய்யவில்லையா?' எனக் கேட்டு ஷாலினியை கமல் கிண்டல் செய்துள்ளார்.

இந்த தகவல்களை மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஏன் தங்கள் காதலுக்கு ஏகே 47 என்ற குறியீடு வார்த்தையைத் தேர்ந்தெடுத்தனர் அஜித்தும், ஷாலினியும் என்று தான் தெரியவில்லை.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
கிரீன் இந்தியா சேலஞ்ச்' - விஜய்யைத் தொடரும் ரசிகர்கள்கிரீன் இந்தியா சேலஞ்ச்' - விஜய்யைத் ... நீ அவ்ளோ வொர்த்தே இல்ல மீராமிதுன் : தீனா நீ அவ்ளோ வொர்த்தே இல்ல மீராமிதுன் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

krishna - chennai,இந்தியா
15 ஆக, 2020 - 13:34 Report Abuse
krishna Ajith Kumar Call Shalini - AK 4 call 7 shalini
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15 ஆக, 2020 - 03:53 Report Abuse
J.V. Iyer தலையிடம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டியது இருக்கின்றன. காதல் உட்பட. தலை எதைத்தான் அழகாக செய்யாமல் விட்டு வைத்தார்? எதிலும் பண்பு, நயம், கலை, அழகு. அஜித் போன்ற கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
Rate this:
14 ஆக, 2020 - 06:32 Report Abuse
chandran, pudhucherry Ajith Kumar AK 47 Love Shalini.
Rate this:
14 ஆக, 2020 - 06:20 Report Abuse
Rajesh-Singapore AK - Ajith Kumar 4 - Love 7 - Shalini
Rate this:
14 ஆக, 2020 - 12:39Report Abuse
ilaiyaraja muthuஎப்படியா இதையெல்லாம் கண்டுபிடிக்கறீங்க...
Rate this:
raji - CHENNAI,இந்தியா
14 ஆக, 2020 - 05:51 Report Abuse
raji சூப்பர்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in