முடிவுக்கு வந்தது அநீதி | பிருத்விராஜ் படத் தலைப்பை மாற்ற வேண்டும்: இந்து அமைப்புகள் அக்ஷய்குமாருக்கு வேண்டுகோள் | யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் |
சமூக வலைத்தளங்களில் கடந்த ஒரு வார காலமாக தேவையற்ற சில சர்ச்சைகளை எழுப்பி வருகிறார் நடிகை மீரா மிதுன். நடிகர்கள் சூர்யா, விஜய் ஆகியோரைப் பற்றியும் அவர்களது குடும்பத்தினரைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசிய சில வீடியோக்களையும் அவர் பதிவிட்டார்.
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்மறையாக செயலாற்றாமல் சமூகம் பயன்பெற நேரத்தை செலவிடுங்கள் என தன் ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே, நடிகர் மகேஷ்பாபு வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய் நேற்று மரக்கன்று ஒன்றை நட்டார். அதையும் விமர்சித்த மீரா மிதுன், “வில்லாவில் மரக்கன்று நடுவதெல்லாம் சமூக அக்கறை அல்ல, எங்கு, எப்படி மரக்கன்று நட வேண்டும் என்பதை நடிகர் விவேக்கிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்,” என விஜய் ரசிகர்களிடையே விவேக்கை கோத்துவிட்ட வேலையை அழகாகப் பார்த்தார்.
அதற்கு நடிகர் விவேக், மீரா மிதுனுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். “மகேஷ்பாபு மற்றும் நம்ம விஜய் மில்லியன் கணக்கில் ரசிகர்களை வைத்திருக்கிறார்கள். இயற்கைக்காக அவர்கள் சில விஷயங்களைச் செய்தால் அவர்களது ரசிகர்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்து அவர்களும் அந்த நல்ல விஷயத்தைச் செய்வார்கள். ஒருவரை வேறொருவருடன் தயவு செய்து ஒப்பிடாதீர்கள். நமது அற்புதமான நோக்கம் பசுமை உலகமே.
மீரா மிதுன், நீங்கள் பதிவிட்டது மில்லியன் கணக்கான விஜய் ரசிகர்களின் உணர்வுகளை பாதிக்கும். மகேஷ்பாபு மற்றும் விஜய் ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள். தயவு செய்து இரண்டு பிரபலங்களை எப்போதும் ஒப்பிடாதீர்கள். இது ஒரு வேண்டுகோள்,” என தெரிவித்துள்ளார்.
யார் அட்வைஸையும் ஏற்காத மீரா மிதுன், விவேக் அட்வைஸை ஏற்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.