Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

45, 60 - ரஜினி, கமல் போட்டா போட்டி

11 ஆக, 2020 - 14:24 IST
எழுத்தின் அளவு:
Rajini,-Kamal-fans-make-trend-in-social-medias

தமிழ்த் திரையுலகத்தில் தற்போதுள்ள நடிகர்களில் இரண்டு முக்கிய நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். ரஜினிகாந்தைப் போல கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்கள் வேறு யாருமில்லை, கமல்ஹாசனைப் போல கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர்கள் வேறு யாருமில்லை, என்பதுதான் நடுநிலை ரசிகர்களின் எண்ணமாக இருக்கும்.

கமல்ஹாசன் 6 வயதிலேயே 1960ம் ஆண்டு வெளிவந்த 'களத்தூர் கண்ணம்மா' படம் மூலம் சினிமாவிற்குள் நடிகராக வந்துவிட்டார். கடந்த 60 வருடங்களில் அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நடிப்பிற்கு சிறந்த முன்னுதாரணமாய் இருக்கிறார்.

ரஜினிகாந்த் 1975ம் ஆண்டு வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன்பின் எத்தனையோ வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அதில் பல படங்கள் கமர்ஷியல் ரீதியாக வசூலில் சாதனை படைத்த பல படங்கள். தமிழ் சினிமாவின் வசூலை உலக அளவில் அதிகரிக்கச் செய்தவர் ரஜினிகாந்த் என்றால் அது மிகையில்லை.

ரஜினி, கமல் இருவருமே உச்சத்தில் இருந்த 80களில் அவர்களது படங்களும், அவர்களுடைய ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டே இருந்தார்கள். அந்தப் போட்டி இன்றும் தொடர்வது ஆச்சரியம்தான்.

ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து வரும் ஆகஸ்ட் 15ம் தேதியுடன் 45 வருடங்கள் ஆகப் போகிறது. கமல்ஹாசன் சினிமாவிற்கு வந்து வரும் ஆகஸ்ட் 12ம் தேதியுடன் 60 வருடங்கள் ஆகப் போகிறது.

சில தினங்களுக்கு முன்பாகவே ரஜினி ரசிகர்கள் அவரின் 45 வருடக் கொண்டாட்டங்களை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு ரஜினிகாந்தும், 'நீங்கள் இல்லாமல் நான் இல்லை' என்று நன்றி தெரிவித்துவிட்டார். அதற்குப் போட்டியாக தற்போது கமல்ஹாசன் ரசிகர்களும் அவரின் 60 வருடக் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

இன்னும் நான்கைந்து நாட்களுக்கு சமூக வலைத்தளங்களில் இவர்களது சாதனைதான் பலராலும் பகிரப்படும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
குவாலிட்டி குறைவு: ஓடிடி தளத்தில் இருந்து சூர்யா படம் நீக்கம்குவாலிட்டி குறைவு: ஓடிடி தளத்தில் ... மீரா மிதுன் விவகாரம் : ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள் மீரா மிதுன் விவகாரம் : ரசிகர்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
12 ஆக, 2020 - 11:13 Report Abuse
Kumar கமல் போல ஒரு நல்ல நடிகர் இனி கிடைப்பது கடினம். இப்போ உள்ள எல்லா ஹீரோக்கள் எல்லாம் கமேற்சியால் ஹீரோக்கள் தான். அது தான் சுலபம். இரண்டு சண்டை காட்சிகள் இரண்டு நடனம் இரண்டு பஞ்ச் வசனம். முடிந்தது படம். நடிப்பு தேவை இல்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in