பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
பிரபல ஹாலிவுட் படமான பாரஸ்ட் ஹம் இந்தியில் லால் சிங் சட்டா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதனை ஆமீர்கான் தயாரித்து நடிக்கிறார். அத்வைத் சண்டன் இயக்குகிறார். அதுல் குல்கர்னி திரைக்கதை எழுதியுள்ளார். ஆமீர்கானுடன் கரீனா கபூர், மோனா சிங் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய்சேதுபதி இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் கால்பதிக்கிறார்.
கொரோனா ஊரடங்குக்கு முன் வரை டில்லி, ராஜஸ்தான், சந்தீகர், அம்ரிஸ்தர், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் இதன் படப்பிடிப்பை லடாக் பகுதியில் நடத்துவது என திட்டமிடப்பட்டிருந்தது. எல்லையில் சீன ராணுவத்தால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக லடாக்கில் திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
தற்போது இந்தியாவில் படப்பிடிப்புக்குத் சாதகமான சூழ்நிலை இல்லை என்பதால் துருக்கியில் படப்பிடிப்பைத் தொடர ஆமீர்கான் முடிவு செய்துள்ளார். இதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு துருக்கி சென்ற ஆமீர்கான், அங்கு லொக்கேஷன்களை ஆய்வு செய்து வருகிறார். இன்னும் ஒரு சில தினங்களில் படப்பிடிப்பு குழுவினர் துருக்கி செல்ல இருக்கிறார்கள்.